Wednesday, July 14, 2010

யோகா To தியானம் - 2

Tamil Top Blogs

அப்படி யோகா க்ளாஸில் டீச்சர் சொன்ன விஷயம்...மூணு நாள் தியான க்ளாஸ் இருக்கு வந்து பாருங்களேனு சொல்ல..சரின்னு நாங்களும் 100 ரூபாய் பணத்தை கட்டிட்டோம்..ஆனா தியானத்துக்கு வந்தது என்னையும் சேத்தி மூணு பேரு,நாங்க காலையில் 9 மணிக்கு டீச்சர் வீட்டுக்கு போய் சேர்ந்தோம்..அங்க போயி பாத்தா ஆண்களும் பெண்களும்மா கிட்டதட்ட 40 பேரு இருந்தாங்க..எல்லாருக்கும் கொக்கம் மற்றும் பிரம்மி ஜீஸ் குடிக்க கொடுத்தாங்க..அதை குடிச்சுட்டு எல்லாரும் போயி ஹாலில் உட்கார்ந்து க்ளாஸ் எடுக்க வர்றவங்களுக்காக வெயிட் பண்ணினோம்.

கொஞ்ச நேரத்தில் ரெண்டு ஆணும்,மூணு பெண்களுமா 5 பேரு வந்து சேர்ந்தாங்க..வந்தவுடனே அறிமுக படலம்,கூடவே எல்லாருக்கும் பேனாவும் நாலு பக்க பேப்பரையும் குடுத்தாங்க.ஒரு பிளாக் போர்டில் பாசிட்டிவ், நெகட்டிவ் தாட்ஸை பத்தியும் அது எப்படி நம் உணர்வில் எப்படியெல்லாம் வேலை செய்யுங்கறதையும்,அதுக்கு நிறைய உதாரணங்களையும் படமாகவும்,பாடமாகவும் சொல்லி தந்தாங்க.அதையும் தொடர்ந்து கொஞ்ச நேரம் தியான பயிற்சியை கொடுத்து அரைமணி நேரம் தியானம்.

அதுவும் ஆச்சு..பிறகு கோள்களை பத்தி,நவகிரகங்கள பத்தி அது எப்படியெல்லாம நம் அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுது..அதை மேலும் எப்படி உபயோகப்படுத்தறதுன்னு சொல்லிட்டு..இன்னைக்கு இந்த தியான பயிற்சி எடுத்தவங்க அடுத்த பத்து நாளைக்கு பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கணும்னு சொல்லிட்டு ஒரு மணி நேர லன்ச் பிரேக் விட்டாங்க.

ஆப்டர் த பிரேக் பாத்தாக்க பாதி பேரை காணோம்..எங்கடா போனாங்கன்னு யோகா டீச்சர் போன் பண்ணி கேக்க..அதுக்கு அவங்க..ஐயோ பிரம்மச்சரியம் அது இதுன்னு சொன்னா எங்க வீட்ல திட்டுவாங்க அதனால வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க.மிச்ச இருக்கறவங்களுக்கு க்ளாஸ் நடந்துச்சு..மத்தியான நேரம் வேற தூக்கம் கண்ணை கட்டுது,பாதி பேர் தூங்கி தூங்கி விழறாங்க..எப்படா அஞ்சு மணியாகும்னு வாட்சை பாக்கறதே வேலையாயிருந்தது.

ரெண்டாவது நாள் இந்த பெருந்தலைக யாரும் இல்ல..அதுக்கடுத்த லெவலில் இருந்த ரெண்டு பேரு தான் க்ளாஸை நடத்தினாங்க..நிறைய கேள்விகள குடுத்து பதில் எழுதி தர சொல்ல ...எழுதி தள்ளிட்டோம்.பிறகு கேள்விக நீங்க கேளுங்க நாங்க விளக்கம் தரோம்னு சொல்ல நிறைய பேருக்கு நிறைய சந்தேகம்..தியானம் பண்ணினா எனக்கு இருக்கற மூட்டு வலி போகுமானு ஒருத்தர்...இன்னொருத்தர் கோயிலுக்கு போகாம தியானம் பண்ணினா நல்லது நடக்குமான்னு கேக்க..அதுக்கு அவங்களும் பதிலை குடுத்தாங்க..கேட்டவங்க திருப்தியானாங்களான்னு தெரியலை.அஞ்சு மணியாயிடுச்சு.

அடுத்த நாள் யோகா டீச்சர் மட்டும் தான் இருந்தாங்க...அன்னைக்கு இந்த ரெண்டு நாளில் என்ன தெரிஞ்சுகிட்டிங்கன்னு டிஸ்கஷன் நடத்தி முடிச்சு ஆண்கள் எல்லாம் வீட்டுக்கு போயாச்சு..லேடீஸ் ஒன்லியா அந்தாக்சரி,மியூசிக்கல் சேர்ன்னு என்ஜாய் பண்ணிட்டு இனி வர்ற எல்லா சனிக்கிழமையும் தியானம் வெச்சுக்கலான்னு முடிவு பண்ணிட்டு வீட்டுக்கு வந்தது தான் வந்த ஸ்பீடில் துபாய் ஓடி போனதால இது வரைக்கும் டீச்சர் வீட்டு பக்கம் எட்டி பாக்க முடியலை.