Sunday, December 28, 2008

விசித்தர தாத்தா - பாகம் 2

பூஜை பண்ணி தொடங்கின மில்,தாத்தாவோட மகன் பொறுப்பில் நல்லா தான் போய்கிட்டிருந்ததா வீட்டில் பேசிக்கிட்டிருந்தாங்க(அப்ப எனக்கு எட்டு வயது).அப்பா வெறும் ஸ்லீப்பிங் பார்ட்னரா தான் இருந்தார்.ஒரு நாள் நாங்க மில்லை பார்த்துட்டு வந்தோம்.அப்பா,அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.

ஆனா எப்பவும் சந்தோஷம் மட்டும் வாழ்க்கை இல்லையே....கொஞ்ச நாளில் தாத்தாவோட மகன் எப்பவும் குடிச்சுட்டு மில்லுக்கே வரதில்லைனும்,பணத்தை வீணா செலவழிக்கறதாகவும் வீட்டில் பேசிக்கிட்டுருந்தாங்க..இப்படியே கொஞ்ச நாள் போச்சு ஒரு நாள் காலையில் தாத்தா பதட்டமா வீட்டுக்கு ஓடி வந்தார்,அவரோட மகன் மில்லில் இருந்த மெஷினுகளை வித்துட்டு வசூல் பண்ணின பணத்தோட எங்கயோ ஓடிட்டார்னும்,மனைவியும் குழந்தைகளும் அவர் வீட்டுக்கு வந்து அழதுட்டு இருக்காங்கனும் சொன்னார்.

அப்பாவும் தெரிஞ்ச ஆளுங்களை வச்சு தெரிஞ்ச பக்கம் எல்லாம் தேடிபார்த்தார் ஆனா ஒரு பிரயோஜனம் இருக்கலை....இதில் எனக்கு புரியாத விஷயம் இவ்வளவு நடந்த பிறகும் எங்க வீட்டில் யாரும் அந்த தாத்தா கூட சண்டையே புடிக்கலை!!!!! பிறகும் வந்து போய் தான் இருந்தாங்க,அடுத்த ரெண்டு மாசத்திலேயே மருமகளோட அப்பா வந்து மகளையும்,குழந்தைகளையும் அழைச்சுட்டு ஊருக்கு போய்ட்டார்.

அவரோட மகன் திரும்ப வரவும் இல்லை,அவங்க பசங்க மட்டும் அப்பப்ப தாத்தா வீட்டுக்கு வந்து செலவுக்கு பணம் வாங்கிட்டு போவாங்க.இதையெல்லாம் தெரிஞ்சுகிட்ட அவரோட ரெண்டாவது மகன் தாத்தா வீ்ட்டுக்கு வரதை நிறுத்திட்டார்.குடும்ப சுமை ஏறிடுமுன்னு பயம்!!!!.

தாத்தாவோட பேரில் ஒரு மெடிக்கல் ஷாப்பின் லைசென்ஸ் இருந்ததால மாசா மாசம் கொஞ்ச பணமும்,அது கூட ஆயுர்வேத வைத்தியம் பாத்து ஓரளவு கிடைச்ச பணத்தில் தான் தாத்தா பாட்டியோட வாழ்க்கை ஓடிட்டிருந்தது.தாத்தாவுக்கு இருந்த தைரியம் பாட்டிக்கு இருக்கலை...எப்பவும் ஓடிப்போன மகன் ஞாபகம் தான், இப்படியே கவலைபட்டு படுத்த படுக்கையாய்ட்டாங்க.

(வாரேன்)....

Friday, December 26, 2008

விசித்தர தாத்தா - பாகம் 1

இந்த தாத்தாவுடைய பெயர் மாதவன்,பாட்டி பேர் தெரியலை.ஊர் திருவனந்தபுரம்.அந்த காலத்து டி.பார்ம் அதோடேயே ஆயுர்வேதத்திலும் நல்ல அனுபவம் இருந்தது.ரொம்ப காலமா ஸ்ரீலங்காவில் குடும்பத்தோடு இருந்தார்.அப்புறம் இந்த ஊருக்கு(கோவை மாவட்டத்தில்) எப்படி வந்தார்னும்,எதுக்கு இங்க குடி வந்தார்னும் தெரியலை!!! அவங்களுக்கு ரெண்டு ஆம்பிளை பசங்க மட்டும் தான்,அவங்களும் படிச்சு நல்ல வேலையில் மாயவரத்தில் இருந்தாங்க.அதில் மூத்த மகனுக்கு இரண்டு பொண்ணும் ஒரு ஆணும்,இரண்டாவது மகனுக்கு இரண்டும் ஆம்பிளை பசங்க.

இந்த தாத்தாவும் பாட்டியும் மட்டுமா தனியா நாங்க இருந்த ஏரியாவில் குடி இருந்தாங்க.எப்பவாவது வீட்டுக்கு வந்து போய் இருந்தாங்க.அப்புறம் கொஞ்ச நாளில் வேற வேற ஏரியாவுக்கு குடி மாறி போய்ட்டோம்.கொஞ்ச நாள் அந்த தாத்தா கூட தொடர்பு இல்லாம இருந்தது. ஒரு நாள் அந்த தாத்தா அவரோட மூத்த மகனை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்தார்,அவரோட மகன் வேலையை விட்டுட்டார்னும்,கிடைச்ச செட்டில்மெண்ட் பணத்தில் தொழில் செய்யறாதகவும் சொன்னார்.

அது வேஸ்ட் காட்டன் மில்ன்னும் தொடங்கினா நல்ல லாபம் இருக்கும்னு எங்கப்பா கிட்ட சொல்லி,அவரையும் பணம் போட சொல்லி கேட்டுகிட்டிருந்தாங்க...அப்பாகிட்ட சொத்து எதுவும் இல்லைனாலும் பண புழக்கம் இருந்த காலம்.அவரும் அடடா நமக்கும் நாலு குழந்தைக இருக்கே மில் நல்லா ஓடுச்சுன்னா அதுங்களும் நல்லா இருக்குமேனு நினைச்சார்!!!!

பொள்ளாச்சியில் இடத்தையும் பார்த்து பூஜையும் போட்டாச்சு.

(வாரேன்)...

Wednesday, December 24, 2008

அழகுக்குறிப்புகள் சில

வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திகொள்ள....

முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடத்தில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

தினமும் ஒரு ஸ்பூன் கடலை மாவுடன் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகம் கழுவினால் நல்ல புதுப்பொலிவுடன் இருக்கும்.

காய்ச்சாத பாலில் கடலை கலந்து அரை மணி வீதம் காலை மாலை தடவி வர பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும்.

தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது பொடி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வாரமொரு முறை கை கால்களில் தேய்த்து குளித்தால் தோல் வழவழப்பாகும்.


முல்தானி மிட்டியுடன் விட்டமின் ஆயிலும் சேர்த்து முகத்தில் பூசினால் முகம் பளிச்சென்று ஆகும்.

வீட்டிலேயே ஹேர்ஆயில் மசாஜ் செய்ய, சமஅளவு தேங்காய் எண்ணெய்யுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து மிதமாக சூடாக்கி ஒரே சீராக தலை முழுவதும் பதினைந்து நிமிடம் மசாஜ் செய்யவும்,பிறகு நல்ல சூடான நீரில் டவலை நனைத்து,பிழிந்து சில நிமிடங்கள் தலையில் சுற்றி வைக்கவும். பிறகு ஷாம்பூ போட்டு தலை கழுவவும்.


இப்போதைக்கு இது டிரை பண்ணிப்பாருங்க.

Saturday, December 20, 2008

அல்லி என் தோழி

இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என்னுடன் படித்தவள்.எனக்கு அவளை(அல்லி) பிடிக்க காரணமே அவளோட பேரும் அவ அக்காகளோட(மல்லி, செண்பகம் மற்றும் தாமரை) பேரும் அவங்க வீட்டு நெய் தோசையும் தான்.ஸ்கூல் அவ வீட்டு பக்கத்திலே இருந்ததால தினமும் இண்டர்வெல் பீரீடியலில் ரெண்டு பேரும் நெய் தோசை சாப்பிட ஓடிடுவோம். அவளோட வீட்டிலேயே,மேல்மாடி அவங்க குடியிருக்கவும்,கீழே பெரிய ஹாலில் அப்பாவும்,பெரியப்பாவும் நெய்,வெண்ணெய் வியாபாரம் செய்துட்டு இருந்தாங்க அதனால எப்பவும் அவங்க வீட்டில் நெய் வாசமா இருக்கும். எங்க ஸ்கூல்(1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை) சந்தைக்குள்ளே இருந்தது, திங்க கிழமை சந்தை கூடுறதால அன்னைக்கு ஸ்கூல் லீவு. அப்பவெல்லாம் நான் அவங்க வீட்டுக்கு ஓடிடுவேன் ஏன்னா பக்கத்து கிராமத்தில் இருந்து ரொம்ப பேர் வெண்ணெய் விக்கறதுக்காக அவங்க வீட்டுக்கு வருவாங்க.அந்த ஏரியாவே ஜெ ஜெனு இருக்கும்.அப்புறம் விதி செய்த சதி 6ம் வகுப்பு முதல் ஸ்கூல் ரொம்ப தூரத்தில் இருந்தது,அதோட நெய் தோசை போய்டுச்சு ஆனா எங்க நட்பு மட்டும் போகலை.ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரதுக்குள்ளே அவ அக்காக்களுக்கும் கல்யாணம் ஆச்சு.நாங்களும் பத்தாவது முடிஞ்சு லீவில் இருந்தோம்.அப்ப ஒரு நாள் கோவிலில் அவளை பார்த்தேன்,என்னால நம்பவே முடியலை.....அவளுக்கு(எங்களுக்கு கூட சொல்லாமலேயே)கல்யாணம் ஆயிடுச்சாம்.அதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சு எதேச்சையா பார்த்தபொழுது அவளுக்கு இரண்டு குழந்தைகள்.கிட்டதட்ட 15 வருஷம் ஆயிடுச்சு அவளை பார்த்து....இங்கு வந்த பிறகும் அவளை இப்பவும் நினைக்க வைக்கற அவங்க வீட்டு பிராண்ட் நெய்!!!!!

Thursday, December 18, 2008

துபாயின் ஒரு மழைக்காலம்

கடந்த இரண்டு மாத காலமா வரட்டுமா வேண்டாமானு கேட்டுகிட்டுருந்த மழை அப்பப்போ
தூறலாகவும் சில இடத்தில் ஆலங்கட்டியோடும் பெய்தது.இடியும் மின்னலும் மேகமூட்டமும் இதோ இப்ப வந்துருவேனும் அறிக்கை விட்டுடிருந்த மழை,நேத்து சாரல் மழையா எங்க ஏரியாவில் வந்ததை பாருங்க.....







இலவசமாய் ஒரு குளியல்








அரபு நாடுகளில் மழையே ஒரு அதிசயம் தானே!!!!

Wednesday, December 17, 2008

என் எழுத்தக்கள்

பதிவுலக நண்பர்களே!

எனக்கும் உங்க ஆதரவு கிடைக்கும்ணு நம்பறேன்.என்னுடைய கன்னி முயற்சி இது. என்னுடைய அனுபவங்களை(நல்லது,கெட்டது) உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.