Monday, November 8, 2010

துபாய் பயணம் - 3

Tamil Top Blogs

கொச்சினிலிருந்து காலையில் பத்தரைக்கு பிளைட்.ஆழப்புழாவில் இருந்து 90 கி.மீ தூரம் ஏர்போர்ட்டுக்கு..அதனால காலையில் ஆறு மணிக்கு கிளம்பினோம்,அதுவே லேட்டுதான் இருந்தாலும் எட்டு மணிக்குள்ள போயி சேர்ந்திடலாம்னு காரை பட்டையை கிளப்பிட்டு ஓட்டினான் அண்ணன். எட்டேகாலுக்கு ஏர்போர்ட் போயாச்சு..அங்க போயி பாத்தா எண்ட்ரன்ஸில் ஒரே கூட்டம் யாரையும் உள்ள விடலை...போயி விசாரிச்சா பிளைட் அஞ்சு மணி நேரம் லேட்டாம்.

நாங்க போக வேண்டிய பிளைட் துபாயிலிருந்து கிளம்பின கொஞ்ச நேரத்தில் ஒரு பாசஞ்சருக்கு ஹார்ட் அட்டாக் வந்து பிளைட் திரும்ப துபாயிக்கே போயிருச்சுன்னு சொன்னாங்க.உடனடியா அங்கிருந்த கேண்டீனில் டிபன் சாப்பிட்டுட்டு அப்புறம் தான் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சோம். அப்ப அண்ணனுக்கு ஒரு ஐடியா..அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில இருக்கற கசினோட வீட்டுக்கு போயிட்டு 12 மணிக்கு திருப்ப வந்திரலாம்னு ஆனா எனக்கோ இந்த லக்கேஜை தூக்கிட்டு கொளுத்தற வெயிலில் போகணுமான்னு..நா வரலைன்னு சொல்ல..பெரியண்ணி ஒரே கிண்டல்...எனக்கு தெரியும் உள்ள போனா ஏ.சி இருக்கும் அதனால தான் அவ வரமாட்டேன்னு சொல்றான்னு.

நானும் அதுக்கு தலையாட்டினேன்..ஆனா உள்ளுக்குள்ள ஒரே டென்ஷன்..இப்படி பிளைட் லேட்டாயிடுச்சேன்னு.எதுக்கும் இன்னொரு தடவை விசாரிச்சுக்கலாம்னு என்கொயரியில் கேக்க ஒன்பதரையில் இருந்து போர்டிங் பாஸ் குடுப்பாங்க செக்கின் பண்ணிக்குங்க சொல்ல பொண்னை கூட்டிட்டு உள்ள போனா..அவ்வளவு கூட்டம் க்யூவில்.கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆச்சு கவுண்ட்டர் பக்கம் போக.பாஸ்போர்ட், ஈ டிக்கெட் எல்லாம் செக் பண்ணிட்டு அவங்களுக்குள்ள என்னமோ ரகசியமா பேசிட்டாங்க...அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒருத்தர் வந்து சொன்னாரு..உங்க விசா மெசேஜ் வரலை அதனால போர்டிங் பாஸ் தரமுடியாதுனு சொல்ல..ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு.

ஏன்னா விசா மெசேஜ் என்னன்னே தெரியலை..எமிரேட்ஸ் ஸ்டாப் கிட்ட கேட்டா நீங்க ஒண்ணும் பண்ணவேண்டியதில்லை உங்க ஹஸ்பண்ட்கிட்ட சொல்லி எம்பசியில் க்ளியர் பண்ணனும்னு சொல்ல..கேக்கவா வேணும் நா எல்லாருக்கும் போன் போட..ஆளாளுக்கு டென்ஷனில் எனக்கு போட...அந்த மூணு மணி நேரத்திலே போனுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் செலவு.அவருக்கு போன் பண்ணி சொன்னா அவருக்கும் டென்ஷன்..இருந்தாலும் என்னை கன்வின்ஷ் பண்ணிட்டு இருந்தார்..அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..விசாவுக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை..நா டெர்மினல் 3க்கு போயிட்டு இருக்கேன்..அங்க போயி போன் பண்றேனு சொல்ல...பொண்ணு வேற அம்மா இன்னிக்கு பப்பாவை பாக்க முடியுமானு கேட்டு அழுக...எனக்கு அப்படியே திரும்ப ஓடி வந்திராலாம்னு தான் தோணிச்சு.

திரும்பவும் கவுண்ட்டர் கிட்ட போனா எதுக்கும் இமிக்ரேஷன் போயி பாருங்க அங்க க்ளியர் பண்ணிட்டா நாங்க போர்டிங் பாஸ் தர்றோம்னு சொன்னதை கேட்டு அங்க போனா இதுக்கும் மேல..போயி சீலும்,கையெழுத்தும் வாங்கிட்டு வான்னு சொல்ல,திரும்பவும் எமிரேட்ஸ் ஆபிசர் கிட்ட வந்து கேக்க..அதுல ஒருத்தன் சொன்னான் போயி எங்க ஹெட்டுகிட்ட பேசுங்கனு சொல்ல அங்கயும் போயி கதையை ஆரம்பத்திலே இருந்து சொல்ல அவரும் கேட்டுகிட்டு கேள்வி மேல கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணிட்டார்.கடைசியில் சைன் பண்ணி குடுத்தார்.

அதை வாங்கிட்டு இமிக்ரேஷன் கவுண்ட்டர் போனா அங்க என்னோட பாஸ்போட்டை வாங்கி வச்சுட்டு அங்க ஆபிஸர் பண்ணின அழும்பு ஐயோ சாமி துபாயே போக வேண்டாம்னு தான் இருந்துச்சு.ஏன் கொச்சின் வந்தேன்? யாரு இங்க இருக்கா...என்னமோ நா தீவிரவாதி மாதிரி,பர்த் பிளேஸ் தமிழ்நாடு,பர்மனன்ட் அட்ரஸ் பெங்களூர்,போர்டிங் கொச்சின்..போறது துபாய்க்கு..என்னால க்ளியர் பண்ண முடியாது..போயி எங்க சீனியர் ஆபிஸர்கிட்ட பேசிட்டு வாங்கன்னு சொல்ல..எனக்கு வந்த எரிச்சலில் ..க்ளியர் பண்ண முடிஞ்சா பண்ணுங்க...இல்லாட்டி விடுங்கனு சொல்ல பக்கத்தில இருந்த வேற ஆபிஸர்..சரி சரி போங்கன்னு சொல்லி சீல் பண்ணி குடுத்தார்.

இதுக்குள்ள அவரோட போன்..PNR statusசை தான் விசா மெசேஜ்ன்னு சொல்லி நம்மள பயமுறுத்தியிருக்காங்கன்னு...அடப்பாவிகளான்னு இப்படி டார்ச்சர் பண்ணிட்டாங்களேன்னு தோணுச்சு.அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் காத்திருந்து, நாலு மணி நேரம் பயணம் முடிஞ்சு தாங்க முடியாத தலைவலியோட துபாய் போய் அங்கிருந்து வீட்டுக்கு போனா..அடடா ரெண்டு கசினோட குடும்பமும் அங்க வந்து உட்கார்ந்து இருக்கு..என்னத்த சொல்ல.........

Wednesday, October 6, 2010

துபாய் பயணம் - 2

அங்க போயி பாத்தா நூறு கணக்கில் போட்டுக நிக்குது.இதுல நாங்க புக் பண்ணின போட்டை கண்டுபிடிக்கறதுக்குள்ள அரை மணி நேரம் காலி.மூணு போட்டுகுள்ள புகுந்து புகுந்து எங்க போட்டுக்கு போறதுகுள்ள வியர்வையில் குளிச்சோம்னு தான் சொல்லணும்...அப்படி ஒரு வெயிலும்,புழுக்கமும்.



இது போற வழியில் பார்த்த ரிசார்ட்...பொதுவா இங்க(ஆழப்புழாவில்) நார்த் இண்டியன்ஸ் மற்றும் வெளிநாட்டு பயணிக தான் ஜாஸ்தி.



இந்த சின்ன போட்டுக தான் இவங்களுக்கு கார் மாதிரி..இதுல தான் இவங்க போக்குவரத்து.அப்ப கூட அந்த பெண்கள் போயிட்டிருந்தது வேலைக்காம்.அவங்கவங்க வசதிக்கு தகுந்த மாதிரி போட் சைஸ்சும் இருக்குமாம்.



தனியா உட்கார்ந்து மீன் பிடிச்சிட்டிருக்கார்..முதல் நாளே ஏதாவது ஒரு ஹோட்டலில் ஆர்டர் எடுத்துகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி கரீ மீன் பிடிக்கறது..கொண்டு போயி குடுத்து காசு பாக்கறது.நாங்களும் ஆன மட்டும் கேட்டு பாத்தோம்..ஒரு மீன் கூட குடுக்கமாட்டாராம்..என்ன கொடுமை இது.இதை விட பெரிய கொடுமை என்னன்னா போட்லேயே லன்ச் அரேன்ஜ் பண்ணுவாங்களாம்..அதை என்னோட அண்ணன் வேண்டாம்னு வேற சொல்லிட்டானாம்...இந்த மீனை தேடிப்போயி கடைசியில் ஒரு கள்ளுக்கடையில் ரெண்டு பிளேட் குச்சிக்கிழங்கும்,மீன் குழம்பும், ஒரு வாத்து பிரைக்கு ரூ 800குடுத்து வாங்கிட்டு வந்தான்..இப்படி தான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கணும்கறது.ஆனாலும் எங்க யானை பசிக்கு அது சோளப்பொறியா தான் இருந்துச்சு.சிராங் (Boat Driver)எங்களை பாத்து பரிதாபட்டு இட்லியும் சாம்பாரையும் சாப்பிட தந்தார்.



இந்த மாதிரி படகுகளை ஏகப்பட்டதை பாக்கலாம்..நம்மள கடந்து போகும் போது டாட்டா காமிக்கறது,எங்கிருந்து வந்திருக்காங்கன்னு தெரிஞ்சக்கறதுன்னு.ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.




ரெஸ்ட் எடு்த்திட்டிருக்கற படகு..24 மணி நேரத்துக்கு வாடகைக்கு எடுத்தா சாயாங்காலம் அஞ்சு மணியோட ஏதாவது ஒரு கரையில் ஒதுக்கி நிறுத்திருவாங்களாம்...அடுத்த நாள் காலையோட போட்டிங் முடிஞ்சிரும்.இந்த படகை ஹனிமூன் படகுன்னு தான் அறிமுகபடுத்தினாங்க...இப்ப ஜாலிக்காக எல்லாருமே போட்டிங் பண்றாங்க.


வாத்து மேய்க்கறவரை போட்டோ எடுக்க மறந்திட்டோம்.ஒரு சின்ன படகில இந்த பக்கமும் அந்த பக்கமுமா ஓடி வாத்துகளை கரையேத்திட்டிருந்தார்..


பினிஷிங் பாயின்ட்க்கு முன்னாடி வந்த இடம்..இதோட ரெண்டு கரையிலும் வீடு,கடைக,ஸ்கூல்..அங்கங்க சின்ன கோவிலுங்களும் பாக்க ரொம்பவே வித்தியாசமா இருந்தது.


எல்லாரும் ஒரு நாள் பொழுதை இப்படி குடும்பத்தோட என்ஜாய் பண்ணி,வீட்டுக்கு வந்து மிச்ச மீதியெல்லாம் பேக் பண்ணி...ரெடி டூ கோன்னு அடுத்த நா காலையில ஏர்போர்ட் போனா...ஊரில இருக்கற ஆப்பெல்லாம் நம்மள தேடி தான் வரும்போல இருக்கு.......

Tamil Top Blogs

Thursday, September 16, 2010

துபாய் பயணம் - 1

Tamil Top Blogs
எதிர் பார்க்காத ஒரு பயணம்னு சொல்லலாம்.ரங்கமணி தான் ஏப்ரல் மாசத்திலே ஒரு மாச லீவுக்கு வரதா இருந்தது ஆனா மே மாசம் அவரோட விசா ரெனியூ பண்ண வேண்டி இருந்ததால வர முடியாதுன்னு சொல்லிட்டார்.பொண்ணோட பரீட்சையும் மார்ச் 20தோட முடியும்..அப்ப அவர் வந்தா ஊரு சுத்த போலாம்னு .இருந்த அவளுக்கு வரலைன்னதும்.. ஒரே வருத்தம்,அழுகை. சரின்னு அவளையும்,அண்ணா பொண்ணையும் அம்மா கூட ஊருக்கு அனுப்பலாம்னு டிக்கெட் புக் பண்ணி மார்ச் 28க்கு ஊருக்கும் போயாச்சு...

அப்ப பாத்தா எனக்கு வைரல் பீவர் வரணும்? அண்ணா அண்ணி காலையிலேயே வேலைக்கும் போயிருவாங்க...கேக்கவா வேணும்.இதுதான் முதல் தடவை பொண்ணு நா இல்லாம ஊருக்கு போறது..அதனால தான் எனக்கு காய்ச்சல் வந்திடுச்சுன்னு எல்லாரும் சொல்ல அவருக்கு ஒரே டென்ஷன்.அடுத்த ரெண்டு நாள் அவர் கூப்பிடவே இல்ல...அவருக்கு என்ன ஆச்சோன்னு நாம இங்க கலக்கத்திலே இருக்க, மெதுவா போன் பண்ணி சொல்றார் உங்க ரெண்டு பேருக்கும் ரெஸிடெண்ட் விசா எடுத்திருக்கேன் எப்ப டிக்கெட் புக் பண்ணட்டும்னு....ஒரு நிமிஷம் தல கால் புரியலை.

விசாவை ஸ்கேன் பண்ணி அனுப்பிட்டார்...ஆனா எங்கிருந்து எங்க டிக்கெட் புக் பண்ணனும்னு ஒரு சின்ன குழப்பம்,சரின்னு போறதுக்கு கொச்சின் டூ துபாயும், ரிட்டன் துபாய் டூ பெங்களூர்ன்னு எமிரேட்ஸில் புக் பண்ணியாச்சு.வெகேஷன் டைம்ங்கறதால டிரெயின்,பஸ் டிக்கெட்டுக்கு பிரச்சனை...அதோட ரெண்டு பெரிய பெட்டியை எப்படி கொண்டு போறதுன்னு வேற..அண்ணா அண்ணி கிட்ட பேசி கார்ல ஆழப்புழா போலாம்னு முடிவு பண்ணி ஊருக்கும் நாங்க வரதையும் சொல்லிட்டோம்.

பெங்களூரில் இருந்து ஆழப்புழாவுக்கு 700 கீ.மீ.ஏப்ரல் பத்தாம் தேதி சாயங்காலம் 5 மணிவாக்குல கிளம்பி அடுத்த நா காலையில 7 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தோம். 13ம் தேதி காலைல பத்தரைக்கு பிளைட்.போன அன்னைக்கு பொண்ணோட டிரெஸ் பேக் பண்ணவும்,எல்லார் கூட பேசவுமே சரியாயிருந்தது.அப்ப பாத்து அண்ணா 12ம் தேதி ஹவுஸ் போட்டிங் போறதுக்கு புக் பண்ணிட்டு வந்திட்டான்..சரின்னு அடுத்த நா காலையிலே அக்கா,பெரியண்ணா,சின்னண்ணா குடும்பங்களோட எங்களையும் சேத்தி 12பேரும் ஏகப்பட்ட ஸ்நாக்ஸோட போட்டிங் கிளம்பியாச்சு.

Wednesday, July 14, 2010

யோகா To தியானம் - 2

Tamil Top Blogs

அப்படி யோகா க்ளாஸில் டீச்சர் சொன்ன விஷயம்...மூணு நாள் தியான க்ளாஸ் இருக்கு வந்து பாருங்களேனு சொல்ல..சரின்னு நாங்களும் 100 ரூபாய் பணத்தை கட்டிட்டோம்..ஆனா தியானத்துக்கு வந்தது என்னையும் சேத்தி மூணு பேரு,நாங்க காலையில் 9 மணிக்கு டீச்சர் வீட்டுக்கு போய் சேர்ந்தோம்..அங்க போயி பாத்தா ஆண்களும் பெண்களும்மா கிட்டதட்ட 40 பேரு இருந்தாங்க..எல்லாருக்கும் கொக்கம் மற்றும் பிரம்மி ஜீஸ் குடிக்க கொடுத்தாங்க..அதை குடிச்சுட்டு எல்லாரும் போயி ஹாலில் உட்கார்ந்து க்ளாஸ் எடுக்க வர்றவங்களுக்காக வெயிட் பண்ணினோம்.

கொஞ்ச நேரத்தில் ரெண்டு ஆணும்,மூணு பெண்களுமா 5 பேரு வந்து சேர்ந்தாங்க..வந்தவுடனே அறிமுக படலம்,கூடவே எல்லாருக்கும் பேனாவும் நாலு பக்க பேப்பரையும் குடுத்தாங்க.ஒரு பிளாக் போர்டில் பாசிட்டிவ், நெகட்டிவ் தாட்ஸை பத்தியும் அது எப்படி நம் உணர்வில் எப்படியெல்லாம் வேலை செய்யுங்கறதையும்,அதுக்கு நிறைய உதாரணங்களையும் படமாகவும்,பாடமாகவும் சொல்லி தந்தாங்க.அதையும் தொடர்ந்து கொஞ்ச நேரம் தியான பயிற்சியை கொடுத்து அரைமணி நேரம் தியானம்.

அதுவும் ஆச்சு..பிறகு கோள்களை பத்தி,நவகிரகங்கள பத்தி அது எப்படியெல்லாம நம் அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுது..அதை மேலும் எப்படி உபயோகப்படுத்தறதுன்னு சொல்லிட்டு..இன்னைக்கு இந்த தியான பயிற்சி எடுத்தவங்க அடுத்த பத்து நாளைக்கு பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கணும்னு சொல்லிட்டு ஒரு மணி நேர லன்ச் பிரேக் விட்டாங்க.

ஆப்டர் த பிரேக் பாத்தாக்க பாதி பேரை காணோம்..எங்கடா போனாங்கன்னு யோகா டீச்சர் போன் பண்ணி கேக்க..அதுக்கு அவங்க..ஐயோ பிரம்மச்சரியம் அது இதுன்னு சொன்னா எங்க வீட்ல திட்டுவாங்க அதனால வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க.மிச்ச இருக்கறவங்களுக்கு க்ளாஸ் நடந்துச்சு..மத்தியான நேரம் வேற தூக்கம் கண்ணை கட்டுது,பாதி பேர் தூங்கி தூங்கி விழறாங்க..எப்படா அஞ்சு மணியாகும்னு வாட்சை பாக்கறதே வேலையாயிருந்தது.

ரெண்டாவது நாள் இந்த பெருந்தலைக யாரும் இல்ல..அதுக்கடுத்த லெவலில் இருந்த ரெண்டு பேரு தான் க்ளாஸை நடத்தினாங்க..நிறைய கேள்விகள குடுத்து பதில் எழுதி தர சொல்ல ...எழுதி தள்ளிட்டோம்.பிறகு கேள்விக நீங்க கேளுங்க நாங்க விளக்கம் தரோம்னு சொல்ல நிறைய பேருக்கு நிறைய சந்தேகம்..தியானம் பண்ணினா எனக்கு இருக்கற மூட்டு வலி போகுமானு ஒருத்தர்...இன்னொருத்தர் கோயிலுக்கு போகாம தியானம் பண்ணினா நல்லது நடக்குமான்னு கேக்க..அதுக்கு அவங்களும் பதிலை குடுத்தாங்க..கேட்டவங்க திருப்தியானாங்களான்னு தெரியலை.அஞ்சு மணியாயிடுச்சு.

அடுத்த நாள் யோகா டீச்சர் மட்டும் தான் இருந்தாங்க...அன்னைக்கு இந்த ரெண்டு நாளில் என்ன தெரிஞ்சுகிட்டிங்கன்னு டிஸ்கஷன் நடத்தி முடிச்சு ஆண்கள் எல்லாம் வீட்டுக்கு போயாச்சு..லேடீஸ் ஒன்லியா அந்தாக்சரி,மியூசிக்கல் சேர்ன்னு என்ஜாய் பண்ணிட்டு இனி வர்ற எல்லா சனிக்கிழமையும் தியானம் வெச்சுக்கலான்னு முடிவு பண்ணிட்டு வீட்டுக்கு வந்தது தான் வந்த ஸ்பீடில் துபாய் ஓடி போனதால இது வரைக்கும் டீச்சர் வீட்டு பக்கம் எட்டி பாக்க முடியலை.

Monday, March 22, 2010

யோகா TO தியானம்

Tamil Top Blogs

யோகா பத்தி முன்னமே ஒரு பதிவு போட்டிருந்தேன்...அதனுடைய தொடர்ச்சி பதிவு இது.

ரெண்டாவதா வந்த யோகா டீச்சரை பாக்கற வரை எங்க எல்லாருக்கும் ஒரு டென்ஷன் இருந்தது..அந்த மாதிரி பில்டப்போட இவங்களும் இருப்பாங்களோனு.ஆனா பாத்தவுடனே அந்த எண்ணம் எல்லாம் பறந்திருச்சு..பின்ன 13 வருஷம் யோகா டீச்சராம் அதுக்கு முன்ன நாலு வருஷம் யோகா படிச்சாங்களாம்..முதல்ல விவேகானந்தா யோகா ,பதஞ்சலி யோகா இப்ப லேட்டஸ்டா ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யோகாவும் கத்துகிட்டாங்களாம்.

நிறைகுடம் தளும்பாதுன்னு இவங்களையும் பாத்து தெரிஞ்சுகிட்டேன்.முதல் பதினைஞ்சு நாள் உடம்பை இலகுவாக்க பயிற்சிகள தான் சொல்லி குடுத்தாங்க..அது கூடவே தினமும் இருபது நிமிஷ தியானமும் இருந்துச்சு.ஒரு மணி நேரந்தான்னு சொல்லிட்டு தினமும் ரெண்டு மணி நேர கிளாஸ் நடந்துச்சு.கூடவே எங்ககிட்ட வாங்கற பணமும் சேரிட்டிக்கு குடுத்திருவாங்களாம்,பத்து வருஷமா இலவசமா தான் சொல்லி குடுத்திட்டிருந்தாங்களாம்..அதுக்கப்புறம் ஸ்டூடன்ஸ்களே கம்பெல் பண்ணி பணம் குடுக்க ஆரம்பிச்சாங்களாம்...அதிலும் 75% சேரிட்டிக்காம்.

ஒவ்வொரு ஆசனத்தை சொல்லி குடுக்கும் போது அதனுடைய பயன் என்ன,அதை வாரத்திலே எத்தன நாள் செய்யணும்கறத விரிவா சொல்லி அதை நாங்க எந்தளவு புரிஞ்சிகிட்டோம்னு தெளிவு படுத்திட்டு தான் அடுத்த ஆசனத்தை சொல்லி குடுப்பாங்க.அதே போல மூச்சு விடுதல் பயிற்சி(பிராணாயாமா)சந்திரானுலோமா,சூர்யானுலோமா,நாடிசுத்தி,கபால பாத்தி..இதையே முறையா பயிற்சி பண்ணினா உங்கள எந்தவித உடல்,எண்ண சம்பந்த கெடுதல்களும் அண்டாதுன்னு சொல்லி ஒவ்வொரு தடவையும் மூச்சு ஓட்டத்தை கவனிக்க சொல்லுவாங்க..அது இப்ப ஒரு பிராக்டிசாவே ஆயிடுச்சு.

கூடவே டைகர் ப்ரீத்திங்,ரேபிட் ப்ரீத்திங்,டாக்(Dog)ப்ரீத்திங்,ஓம்காரா,ஆ காராவில் தொடங்கி வஜ்ராசனா,புஜங்காசனா,பவனமுக்தாசனா,மர்க்கட்டாசனா, சூர்யநமஸ்கார மற்றும் இன்னும் பல ஆசனங்களை சொல்லி குடுத்தாங்க..இப்படி ஒரு இன்வால்மெண்டோட நாங்க பத்து பேரும் கத்துகிட்டிருக்க...இன்ஸ்டியூட் காரங்க ஒரு குண்டை தூக்கி டீச்சர் தல மேல போட நாங்க தான் அவங்கள விட பதறிப்போனோம்..அது என்னன்னா இன்டியூட்டில ரெண்டு பேரு இருப்பாங்க...ஷிப்ட் போட்டுட்டு அவங்க ரெண்டு பேரும் பாத்துக்குவாங்க..அதுல ஒருத்தர் மொபைலை ஒரு நா அங்கயே மறந்து வைச்சுட்டு போயிட்டார்...அடுத்த நாள் வந்து பாத்தா அது அங்க இல்ல,யாரோ எடுத்திட்டு போயிட்டாங்க. காலைல 6 டூ 7 ஒரு பேட்ச்சும் 11 டூ 12 ஒரு பேட்ச்சும் யோகா இருக்கும்...நாங்க எல்லாம் செகண்ட் ஷிப்ட் பார்ட்டிக..அதனால காலைல வந்த பேட்ச்சுல தான் யாரோ எடுத்திருக்கணும்னு சொல்லி டீச்சரையே சந்தேகப்பட்டு திட்டிட்டார்...

அடுத்த நாளே வேற ஒரு டீச்சரை கூட்டிட்டு வந்து விட்டுட்டு இனிமே இவங்க தான் சொல்லி குடுப்பாங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க..எங்களுக்கு வந்த மனவேதனைக்கு இன்ஸ்டியூட்காரங்கள நல்லா காய்ச்சிட்டோம்..அவங்க என்னதான் மன்னிப்பு கேட்டாலும் மனசு ஆறவேயில்லை....ஆனா எங்க மனசை கூல் பண்ண ரெண்டே நாளில் யோகா டீச்சர் வந்தாங்க...அது என்னன்னா !!!!!!

Tuesday, March 16, 2010

பவித்ரா


Tamil Top Blogs

இவங்க தான் பவித்ரா,இனி ரெண்டு மாசத்தில் முதல் பிறந்த நாளை கொண்டாட போறாங்க.
டிசம்பர் மாதம் பெங்களூர் வந்தாங்க,எங்களுக்கு பக்கத்திலேயே இவங்களுக்கும் வீடு பாத்து குடி வந்தவங்க.இவங்க வேற யாரு இல்ல..என்னோட மாமா பையனோட பொண்ணு தான் இந்த குட்டி தேவதை.

அப்பா அனிமேஷன் ப்ரீலான்சராவும் அம்மா சிவில் இன்ஜினியராவும் வொர்க் பண்றாங்க.அதனால ஒரு நாளில் அதிக நேரம் என்னோட தான் இருப்பாங்க.ரொம்ப சூட்டி...அதிகமா அழுகையெல்லாம் இல்ல..பிடித்தது லேப்டாப்பும்,மொபைலும்.

என்னை பாத்ததும் கூப்பிடற வார்த்தை வாவூ..இதுக்கு என்ன அர்த்தம்னு அவளுக்கு மட்டும் தான் தெரியும்.அதே மாதிரி சாப்பிடற எந்த பொருளும் அவளோட மொழியில் மாம்பக்.எனக்கும் இனம் தெரியா பாசம் அவ மேலே...அம்மா தான் சொல்லிட்டிருக்காங்க ஏதோ ஒண்ணு போனஜென்மத்திலே விட்டு போயிருக்கும் அதான் இந்த ஜென்மத்திலே ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் பாசத்தை பொழியறீங்கன்னு.

இதையெல்லாம் ஏன் எழுதினேன்னு கேட்டாக்க..நல்ல காலத்திலேயே நாம எழுதறது ரொம்ப இப்ப இவங்க லேப்டாப்பை தொட விடறதுயில்லைன்னு நீங்களும் தெரிஞ்ச்சுக்கணும் இல்லையா அதான்.!!!!!!

பெ(ண்)ங்களூர் சார்பா எல்லாருக்கும் யுகாதி வாழ்த்துக்கள்.

Wednesday, February 17, 2010

வேலன்டைன்ஸ் டே

Tamil Top Blogs

2000ம் வருஷம் ஜீலையில்,நா வேலை செய்திட்டிருந்த யூனிட்டில் ஒரு நாள் ஹெச் ஆர் ஆப்பிசர் என்கிட்ட நாளைக்கு ஹெட்ஆபிஸ் ஐ.டியிருந்து சுபாஷ்ன்னு ஒருத்தர் வருவார்..புதுசா ஒரு சாப்ட்வேர் டெவலப் பண்ணியிருக்கராம் அதை நீ யூஸ் பண்ற கம்பியூட்டரில் இன்ஸ்டால் பண்ணி உனக்கு டிரெயினிங் குடுப்பார்ன்னு சொன்னார்.நானும் சரி சரின்னு தலையாட்டுனேன்.ஏன்னா இதுக்கு முன்னாடி ஐ.டியிலிருந்து வந்தவங்க எல்லாம் மிடில் ஏஜ் ஆசாமிங்க...நாம ஏதாவது சந்தேகத்தை கேட்டுட்டா போதும் உடனே ..நாங்க யாரு தெரியுமில்ல(வர்றதே பேக்அப் எடுக்கறதுக்கு)..இந்த மாதிரி கேள்வியெல்லாம் எங்க கிட்ட கேக்ககூடாதுன்னு சீன் போடுவாங்க...அந்த மாதிரி தான் இருக்கும்னு நினைச்சேன்.விதி யாரை விட்டது.

அடுத்த நாள் காலைல பதினோரு மணிவாக்கில் நெடு நெடுன்னு உயரமா நெத்தியிலே திருநீறு கையில ஹெல்மெட்டோட ஒரு ஆளு ஆபிசுக்குள்ளே வந்தார்..யாருன்னு விசாரிக்கறதுகுள்ள மேனேஜர் வந்து ஹாய்ன்னு சொல்லி அவரோட கேபினுக்குள்ள கூட்டிட்டு போயிட்டார்..பின்னாடியே ஹெச் ஆர் ஆபிசரும் போயி அரைமணி நேர டிஸ்கஷன் முடிஞ்சு வெளிய நேரா என் டேபிளுக்கு வந்து ..இவர் தான் சுபாஷ்...இவங்க சிந்துன்னு அறிமுகபடுத்த...அதிர்ச்சியா தான் இருந்துச்சு..பின்ன ஒரு மிடில் ஏஜ் ஆளை எதிர்பார்த்திட்டிருக்கும்போது இப்படி ஒரு யங்மேன் வந்து நின்னா......

ரெண்டு நாள்ல இன்ஸ்லேஷன் பண்ணிட்டு ஒரு நாள்ல டிரெயினிங் முடிஞ்சிடும்னு சொன்னார்...சோ ரெண்டு நாளைக்கு எனக்கு சிஸ்டத்திலே வேலை இல்லைன்னு ஒரே குஷியா இருந்துச்சு...முத நாளு யூனிட்டுகுள்ளே ஒவ்வொரு செக்ஷ்னா போயி எல்லார் கூடயும் அரட்டை கச்சேரி நடத்திட்டு என் டேபிளுக்கு வந்தா ஹெச் ஆர் ஆபிசர் கூப்பிட்டு நீ தான் டிரெயினிங் எடுக்கணும்..இப்படி கேர்லஸ்ஸா அங்க இங்கயும் சுத்திட்டு இருக்காதேன்னு ரொம்ப அன்பா சொன்னார்.அடுத்த நாளு சீட்டை விட்டு எங்கயும் போகமா இவரு பண்றதை கர்ம சிரத்தையா கவனிக்காம நா பாட்டுக்கு கேள்வி மேல கேள்வி கேட்டு சரியா கடுப்படிச்சேன்.எவ்வளவு நேரந்தான் நல்லவனா நடிக்கமுடியும்...கடைசியிலே ரொம்ப பொறுமையா சொன்னார்...உங்களுக்கு சொல்லிகுடுக்கும் போது உங்க சந்தேகத்தையெல்லாம் கேளுங்க..இப்ப தயவுபண்ணி எந்திரிச்சுபோங்கன்னு சொன்னார்...இருப்பனா அங்க?

நாங்க தான் முப்பெரும் தேவியராச்சே...உடனே அவங்க ரெண்டு பேர்கிட்டயும் இதை சொல்லணுமே..இனி எப்படி கலாய்க்கறதுன்னும் பிளானிங் வேற.அடுத்த நாளே டிரெயினிங்கும்...நம்ம மரமண்டைக்கு ஒண்ணும் ஏறலை..எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையை ஆட்டிவைச்சேன்.இது ஃபாக்ஸ்ப்ரோவில் பண்ணின பேரோல் ப்ரோகிராம்..பதினைந்து நாளுக்கு ஒரு தடவை பேரோல் ரெடி பண்ணனும்..அதுல சம்பள கணக்கை எண்ட்ரி கொடுத்தா ஈ.எஸ்.ஐயும்,பி.எப்பும் கட்டாகி பேலன்ஸ் இவ்வளவுன்னு காமிக்கணும்..அதுல எப்ப பண்ணினாலும் பி.எப் அமவுண்ட் டேலியே ஆகாது..அதை மேனுவலா பண்ணனும்...இதுக்கு மேனுவலாவே பண்ணிக்கலாம்னு நான் ஹெ.ஆர் ஆபிசர்கிட்ட சண்டை போடுவேன்..உடனே அவரும் போனை போட்டு..சுபாஷ் அர்ஜண்ட் ஹியர் கூப்பிட இவரு இப்ப வரமுடியாது நாளைக்கு வர்றேனு சொல்லுவார்.

என்ன ப்ரோகிராம் பண்ணினாரோ..ஒவ்வொரு தடவையும் அவர் வந்தா தான் பேரோலே ரெடியாகும்.இப்படி வந்து வந்து எங்க கேங் கூட ஹாய் ஹலோ சொல்லிக்கறளவு பேசுவார்.இப்படி இங்க வரும் போது அடிக்கடி மேனேஜர் கூட காணாம போயிடுவார்...அதையும் கண்டுபிடிப்பம்ல்ல...வேற எதுக்கு தம்மடிக்க தான்..அதை கேட்டபோது வழிஞ்சார் பாருங்க...ஐயோ எனக்கு இது ஹேபிட் இல்ல சும்மா அவருக்கு கம்பெனி குடுக்க தான் போனேன்னு.இவரு இப்படியெல்லாம் நல்லவருன்னு சொன்னா நம்பிடுவோமா...எங்க கேங்கில் ஒரு பாலிஸி வெச்சிருந்தோம் வாரத்திலே ஒரு நாள் லன்ச் வெளியே..அதை வாரத்துக்கு ஒரு ஆள் செலவு பண்ணனும்..அப்படி சில சமயம் நாங்க போகும் போது இவர் எங்க ஆபிஸில் இருப்பார்..ஆனா நாங்க யாருமே அவரை லன்ச்சுக்கு கூப்பிடலை.ரெண்டு மூணு தடவை அவரும் கண்டுக்கலை..ஆனா மனசில இருந்திருக்கும் போல.ஒரு தடவை கேட்டே கேட்டுட்டார்..என்னை மட்டும் ஏன் கூப்பிடறதுயில்லைன்னு!!!

அதுக்கு நா சொன்னேன்..நெக்ஸ்ட் வீக் என்னோட டர்ன்..அப்ப போன் பண்றேன்..வாங்கன்னு சொன்னேன்..ஆனா லன்ச்சுக்கு போகலாம்னு போன் பண்ணின போது இப்ப வரமுடியாதுன்னு சொல்லிட்டார்..ரொம்ப தான் பிகு பண்றார்னு நாங்களும் விட்டுட்டோம்.திடீர்னு ஒரு நாள் வந்து இன்னைக்கு எல்லாரும் லன்ச்சுக்கு போகலாம்னு கூப்பிட்டார் என்னை தவிர மிச்ச மூணு பேரும்(ரெண்டு பொண்ணுக,ஒரு பையன்) இன்ஸ்பெக்ஷன் நடந்திட்டிருக்கு அதனால இன்னைக்கு போகமுடியாதுன்னு சொல்ல, உடனே இவர் நா உங்களுக்காக தான் ஆபிஸில் பர்மிஷன் எடுத்துட்டு வீட்டுக்கும் லன்ச்சுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டேனேனு சொல்ல நாங்க அதனால என்ன இப்ப வீட்டுக்கு போனா சாப்பிட முடியாதானு கேக்க அவருக்கு முகமெல்லாம் ஒரு மாதிரியாயிடுச்சு.

நாங்க நாலு பேரும் சேர்ந்து முடிவு பண்ணி அன்னைக்கு நான் மட்டும் அவர்கூட லன்ச் சாப்பிடபோனேன்.அதுக்கு பிறகு நிறைய தடவை எங்க கேங்கோட அவுட்டிங்கில் அவரையும் சேர்த்துகிட்டோம்.அடுத்ததா வேற ஏதோ ஒரு புது சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணவும்,டிரெயினிங் பண்ண சென்னையிலிருந்து வந்த ஒரு இன்ஜினியரோட வந்தாங்க.இந்த தடவை மூணு மாசத்துக்கும் மேலா தினமும் இவங்க டீம் வந்து போயிட்டிருந்தது.அப்படி ஒரு நாள் நாங்க பேசிட்டிருக்கும் போது கேஷுவலா நா உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறேன் சொல்ல..என்னை கலாய்க்கதான்னு நினைச்சு..ஓஓஓ சரி எங்க வீட்ல வந்து கேளுங்க..எல்லாரும் சரின்னு சொன்னா நா ஒத்துக்கறேன்னு (அவர் என்னை கிண்டல் பண்றதா நினைச்சு)சொன்னேன்.அப்ப அது விளையாட்டா தான் தெரிஞ்சுது அதனால அதை அப்பவே மறந்துட்டேன்.

ஆனா அவர் நிஜமாவே அவங்க வீட்ல சொல்ல, அவங்க அப்பாவுக்கு டென்ஷனாயிடுச்சு..வீட்ல மூத்த பிள்ளை ,தம்பி வேற இன்ஜினிரியங் படிக்கறான்,அப்பாவும் ரிட்டயர் ஆயிட்டாரு..அதனால அப்பா ஒரே பிடிவாதமா தம்பி படிச்சு முடிக்கட்டும் அப்புறம் பாக்கலாம்னு சொல்ல இவரு ரெண்டு நாளா சாப்பாடு தண்ணியில்லாம சத்தியாகிரகம் இருக்க,அதுக்குள்ள இவரோட தாய்மாமாவுக்கு விஷயத்தை சொல்ல ஒரு வழியா என்னை வந்து பாக்கறதுக்கு சம்மதம் வாங்கிட்டாரு.ஒரு நாள் எனக்கு போன் பண்ணி அவங்க வரப்போறதை சொன்னார்...ஐயோன்னு ஆயிடுச்சு..இப்ப என்ன பண்றதுன்னு ஒரு வழியா அக்காகிட்ட சொன்னேன் அப்படியே வீட்ல எல்லாருக்கும் தெரியவந்தது..யாரும் ஒண்ணும் சொல்லலை..அவங்க முதல்ல வந்து பாக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க.

அவரும் அம்மாவும் மட்டும் வீட்டுக்கு வர...எங்கவீட்ல எல்லாரும் என்னடா பையனோட அப்பா வரலையேன்னு கேக்க...அப்பா சொல்லி தான் அனுப்பியிருக்காராம்..அவரை அவரோட வீட்ல வந்து தான் பாக்கணும்னு சொல்ல..இது என்ன புது வம்புன்னு தான் நினைச்சோம்.வீட்ல எல்லாரும் திரும்ப திரும்ப ஒரே கேள்வியை தான் கேட்டாங்க..இந்த பையனை தான் கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கறயான்னு..நா அப்படியெல்லாம் இல்லனு சொல்ல,சரி எதுக்கும் அவங்க வீட்ல போயி பாக்கலாம்னு ஒரு நாள் சாயங்காலம் என்னை தவிர எல்லாரும் போனாங்க.திரும்ப வரும்போது யாரோட முகமும் சரியாயில்லை..என்கிட்ட எப்படி சொல்லறதுன்னும் தெரியலை..அக்கா தான் கடைசியிலே சொன்னா..அவங்க அப்பா ரொம்ப ரஃப்பா பேசினார்ன்னும் இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட அவருக்கு இஷ்டம் இல்லைன்னும், நானும் சரி இதை பத்தி இனி நாம எதும் பேசவேண்டான்னு சொல்லிட்டேன்.

அன்னைக்கு நைட்டு அக்காவும் நானும் மட்டும் பேசிட்டிருக்கும் போது அவ ஒரு விஷயம் சொன்னா..அன்னைக்கு சுபாஷ் கூட வந்தது அவரோட அம்மா இல்ல சித்தின்னு சொல்ல,அது எப்படி உனக்கு தெரியும்னு கேக்க..அன்னைக்கு வீட்டுக்கு போனபோது அவரோட அப்பா சொன்ன தகவல் அது.அவருக்கு 4 வயசிருக்கும்போதே அம்மா இறந்துட்டாங்களாம்..அதுக்கு பிறகு இவங்கள கல்யாணம் பண்ணிட்டார்...இவங்க மகன் தான் சின்னவர்.அதுதான் அப்பாவோட பயத்துக்கும் காரணம்..இவன் கல்யாணம் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே போயிட்டா ..என்ன பண்றதுன்னு.இதையெல்லாம் கேட்டுட்டு அப்பவே என் மனசு மாறிடுச்சு..அடுத்த நாள் காலையில வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்..அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு...

ஜாதகம் எதும் பாக்காம மேயில் நிச்சயம் பண்ணி எட்டு மாசம் கழிச்சு பல பிரச்சனைகளோட டிசம்பரில் எங்க கல்யாணம் நடந்துச்சு.இப்பவும் அவர்கிட்ட கேக்கற கேள்வி..அப்படி பிடிவாதம் பிடிச்சு என்னை கல்யாணம் பண்ணி என்னத்தை சாதிச்சீங்கன்னு கேட்டா..என்ன பண்றது அப்ப என் புத்தி மழுங்கிபோயிருந்தது..இப்ப தான் அந்த ஞானோதயம் எல்லாம் வருதுங்கறார்.இப்படியெல்லாம் சொன்னாலும் இது வரைக்கும் வேலன்டைன்ஸ் டே கிப்ட் குடுக்க மறந்ததில்லை.