Thursday, September 16, 2010

துபாய் பயணம் - 1

Tamil Top Blogs
எதிர் பார்க்காத ஒரு பயணம்னு சொல்லலாம்.ரங்கமணி தான் ஏப்ரல் மாசத்திலே ஒரு மாச லீவுக்கு வரதா இருந்தது ஆனா மே மாசம் அவரோட விசா ரெனியூ பண்ண வேண்டி இருந்ததால வர முடியாதுன்னு சொல்லிட்டார்.பொண்ணோட பரீட்சையும் மார்ச் 20தோட முடியும்..அப்ப அவர் வந்தா ஊரு சுத்த போலாம்னு .இருந்த அவளுக்கு வரலைன்னதும்.. ஒரே வருத்தம்,அழுகை. சரின்னு அவளையும்,அண்ணா பொண்ணையும் அம்மா கூட ஊருக்கு அனுப்பலாம்னு டிக்கெட் புக் பண்ணி மார்ச் 28க்கு ஊருக்கும் போயாச்சு...

அப்ப பாத்தா எனக்கு வைரல் பீவர் வரணும்? அண்ணா அண்ணி காலையிலேயே வேலைக்கும் போயிருவாங்க...கேக்கவா வேணும்.இதுதான் முதல் தடவை பொண்ணு நா இல்லாம ஊருக்கு போறது..அதனால தான் எனக்கு காய்ச்சல் வந்திடுச்சுன்னு எல்லாரும் சொல்ல அவருக்கு ஒரே டென்ஷன்.அடுத்த ரெண்டு நாள் அவர் கூப்பிடவே இல்ல...அவருக்கு என்ன ஆச்சோன்னு நாம இங்க கலக்கத்திலே இருக்க, மெதுவா போன் பண்ணி சொல்றார் உங்க ரெண்டு பேருக்கும் ரெஸிடெண்ட் விசா எடுத்திருக்கேன் எப்ப டிக்கெட் புக் பண்ணட்டும்னு....ஒரு நிமிஷம் தல கால் புரியலை.

விசாவை ஸ்கேன் பண்ணி அனுப்பிட்டார்...ஆனா எங்கிருந்து எங்க டிக்கெட் புக் பண்ணனும்னு ஒரு சின்ன குழப்பம்,சரின்னு போறதுக்கு கொச்சின் டூ துபாயும், ரிட்டன் துபாய் டூ பெங்களூர்ன்னு எமிரேட்ஸில் புக் பண்ணியாச்சு.வெகேஷன் டைம்ங்கறதால டிரெயின்,பஸ் டிக்கெட்டுக்கு பிரச்சனை...அதோட ரெண்டு பெரிய பெட்டியை எப்படி கொண்டு போறதுன்னு வேற..அண்ணா அண்ணி கிட்ட பேசி கார்ல ஆழப்புழா போலாம்னு முடிவு பண்ணி ஊருக்கும் நாங்க வரதையும் சொல்லிட்டோம்.

பெங்களூரில் இருந்து ஆழப்புழாவுக்கு 700 கீ.மீ.ஏப்ரல் பத்தாம் தேதி சாயங்காலம் 5 மணிவாக்குல கிளம்பி அடுத்த நா காலையில 7 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தோம். 13ம் தேதி காலைல பத்தரைக்கு பிளைட்.போன அன்னைக்கு பொண்ணோட டிரெஸ் பேக் பண்ணவும்,எல்லார் கூட பேசவுமே சரியாயிருந்தது.அப்ப பாத்து அண்ணா 12ம் தேதி ஹவுஸ் போட்டிங் போறதுக்கு புக் பண்ணிட்டு வந்திட்டான்..சரின்னு அடுத்த நா காலையிலே அக்கா,பெரியண்ணா,சின்னண்ணா குடும்பங்களோட எங்களையும் சேத்தி 12பேரும் ஏகப்பட்ட ஸ்நாக்ஸோட போட்டிங் கிளம்பியாச்சு.