Monday, November 8, 2010
துபாய் பயணம் - 3
கொச்சினிலிருந்து காலையில் பத்தரைக்கு பிளைட்.ஆழப்புழாவில் இருந்து 90 கி.மீ தூரம் ஏர்போர்ட்டுக்கு..அதனால காலையில் ஆறு மணிக்கு கிளம்பினோம்,அதுவே லேட்டுதான் இருந்தாலும் எட்டு மணிக்குள்ள போயி சேர்ந்திடலாம்னு காரை பட்டையை கிளப்பிட்டு ஓட்டினான் அண்ணன். எட்டேகாலுக்கு ஏர்போர்ட் போயாச்சு..அங்க போயி பாத்தா எண்ட்ரன்ஸில் ஒரே கூட்டம் யாரையும் உள்ள விடலை...போயி விசாரிச்சா பிளைட் அஞ்சு மணி நேரம் லேட்டாம்.
நாங்க போக வேண்டிய பிளைட் துபாயிலிருந்து கிளம்பின கொஞ்ச நேரத்தில் ஒரு பாசஞ்சருக்கு ஹார்ட் அட்டாக் வந்து பிளைட் திரும்ப துபாயிக்கே போயிருச்சுன்னு சொன்னாங்க.உடனடியா அங்கிருந்த கேண்டீனில் டிபன் சாப்பிட்டுட்டு அப்புறம் தான் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சோம். அப்ப அண்ணனுக்கு ஒரு ஐடியா..அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில இருக்கற கசினோட வீட்டுக்கு போயிட்டு 12 மணிக்கு திருப்ப வந்திரலாம்னு ஆனா எனக்கோ இந்த லக்கேஜை தூக்கிட்டு கொளுத்தற வெயிலில் போகணுமான்னு..நா வரலைன்னு சொல்ல..பெரியண்ணி ஒரே கிண்டல்...எனக்கு தெரியும் உள்ள போனா ஏ.சி இருக்கும் அதனால தான் அவ வரமாட்டேன்னு சொல்றான்னு.
நானும் அதுக்கு தலையாட்டினேன்..ஆனா உள்ளுக்குள்ள ஒரே டென்ஷன்..இப்படி பிளைட் லேட்டாயிடுச்சேன்னு.எதுக்கும் இன்னொரு தடவை விசாரிச்சுக்கலாம்னு என்கொயரியில் கேக்க ஒன்பதரையில் இருந்து போர்டிங் பாஸ் குடுப்பாங்க செக்கின் பண்ணிக்குங்க சொல்ல பொண்னை கூட்டிட்டு உள்ள போனா..அவ்வளவு கூட்டம் க்யூவில்.கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆச்சு கவுண்ட்டர் பக்கம் போக.பாஸ்போர்ட், ஈ டிக்கெட் எல்லாம் செக் பண்ணிட்டு அவங்களுக்குள்ள என்னமோ ரகசியமா பேசிட்டாங்க...அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒருத்தர் வந்து சொன்னாரு..உங்க விசா மெசேஜ் வரலை அதனால போர்டிங் பாஸ் தரமுடியாதுனு சொல்ல..ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு.
ஏன்னா விசா மெசேஜ் என்னன்னே தெரியலை..எமிரேட்ஸ் ஸ்டாப் கிட்ட கேட்டா நீங்க ஒண்ணும் பண்ணவேண்டியதில்லை உங்க ஹஸ்பண்ட்கிட்ட சொல்லி எம்பசியில் க்ளியர் பண்ணனும்னு சொல்ல..கேக்கவா வேணும் நா எல்லாருக்கும் போன் போட..ஆளாளுக்கு டென்ஷனில் எனக்கு போட...அந்த மூணு மணி நேரத்திலே போனுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் செலவு.அவருக்கு போன் பண்ணி சொன்னா அவருக்கும் டென்ஷன்..இருந்தாலும் என்னை கன்வின்ஷ் பண்ணிட்டு இருந்தார்..அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..விசாவுக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை..நா டெர்மினல் 3க்கு போயிட்டு இருக்கேன்..அங்க போயி போன் பண்றேனு சொல்ல...பொண்ணு வேற அம்மா இன்னிக்கு பப்பாவை பாக்க முடியுமானு கேட்டு அழுக...எனக்கு அப்படியே திரும்ப ஓடி வந்திராலாம்னு தான் தோணிச்சு.
திரும்பவும் கவுண்ட்டர் கிட்ட போனா எதுக்கும் இமிக்ரேஷன் போயி பாருங்க அங்க க்ளியர் பண்ணிட்டா நாங்க போர்டிங் பாஸ் தர்றோம்னு சொன்னதை கேட்டு அங்க போனா இதுக்கும் மேல..போயி சீலும்,கையெழுத்தும் வாங்கிட்டு வான்னு சொல்ல,திரும்பவும் எமிரேட்ஸ் ஆபிசர் கிட்ட வந்து கேக்க..அதுல ஒருத்தன் சொன்னான் போயி எங்க ஹெட்டுகிட்ட பேசுங்கனு சொல்ல அங்கயும் போயி கதையை ஆரம்பத்திலே இருந்து சொல்ல அவரும் கேட்டுகிட்டு கேள்வி மேல கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணிட்டார்.கடைசியில் சைன் பண்ணி குடுத்தார்.
அதை வாங்கிட்டு இமிக்ரேஷன் கவுண்ட்டர் போனா அங்க என்னோட பாஸ்போட்டை வாங்கி வச்சுட்டு அங்க ஆபிஸர் பண்ணின அழும்பு ஐயோ சாமி துபாயே போக வேண்டாம்னு தான் இருந்துச்சு.ஏன் கொச்சின் வந்தேன்? யாரு இங்க இருக்கா...என்னமோ நா தீவிரவாதி மாதிரி,பர்த் பிளேஸ் தமிழ்நாடு,பர்மனன்ட் அட்ரஸ் பெங்களூர்,போர்டிங் கொச்சின்..போறது துபாய்க்கு..என்னால க்ளியர் பண்ண முடியாது..போயி எங்க சீனியர் ஆபிஸர்கிட்ட பேசிட்டு வாங்கன்னு சொல்ல..எனக்கு வந்த எரிச்சலில் ..க்ளியர் பண்ண முடிஞ்சா பண்ணுங்க...இல்லாட்டி விடுங்கனு சொல்ல பக்கத்தில இருந்த வேற ஆபிஸர்..சரி சரி போங்கன்னு சொல்லி சீல் பண்ணி குடுத்தார்.
இதுக்குள்ள அவரோட போன்..PNR statusசை தான் விசா மெசேஜ்ன்னு சொல்லி நம்மள பயமுறுத்தியிருக்காங்கன்னு...அடப்பாவிகளான்னு இப்படி டார்ச்சர் பண்ணிட்டாங்களேன்னு தோணுச்சு.அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் காத்திருந்து, நாலு மணி நேரம் பயணம் முடிஞ்சு தாங்க முடியாத தலைவலியோட துபாய் போய் அங்கிருந்து வீட்டுக்கு போனா..அடடா ரெண்டு கசினோட குடும்பமும் அங்க வந்து உட்கார்ந்து இருக்கு..என்னத்த சொல்ல.........
Subscribe to:
Posts (Atom)