Wednesday, October 6, 2010

துபாய் பயணம் - 2

அங்க போயி பாத்தா நூறு கணக்கில் போட்டுக நிக்குது.இதுல நாங்க புக் பண்ணின போட்டை கண்டுபிடிக்கறதுக்குள்ள அரை மணி நேரம் காலி.மூணு போட்டுகுள்ள புகுந்து புகுந்து எங்க போட்டுக்கு போறதுகுள்ள வியர்வையில் குளிச்சோம்னு தான் சொல்லணும்...அப்படி ஒரு வெயிலும்,புழுக்கமும்.



இது போற வழியில் பார்த்த ரிசார்ட்...பொதுவா இங்க(ஆழப்புழாவில்) நார்த் இண்டியன்ஸ் மற்றும் வெளிநாட்டு பயணிக தான் ஜாஸ்தி.



இந்த சின்ன போட்டுக தான் இவங்களுக்கு கார் மாதிரி..இதுல தான் இவங்க போக்குவரத்து.அப்ப கூட அந்த பெண்கள் போயிட்டிருந்தது வேலைக்காம்.அவங்கவங்க வசதிக்கு தகுந்த மாதிரி போட் சைஸ்சும் இருக்குமாம்.



தனியா உட்கார்ந்து மீன் பிடிச்சிட்டிருக்கார்..முதல் நாளே ஏதாவது ஒரு ஹோட்டலில் ஆர்டர் எடுத்துகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி கரீ மீன் பிடிக்கறது..கொண்டு போயி குடுத்து காசு பாக்கறது.நாங்களும் ஆன மட்டும் கேட்டு பாத்தோம்..ஒரு மீன் கூட குடுக்கமாட்டாராம்..என்ன கொடுமை இது.இதை விட பெரிய கொடுமை என்னன்னா போட்லேயே லன்ச் அரேன்ஜ் பண்ணுவாங்களாம்..அதை என்னோட அண்ணன் வேண்டாம்னு வேற சொல்லிட்டானாம்...இந்த மீனை தேடிப்போயி கடைசியில் ஒரு கள்ளுக்கடையில் ரெண்டு பிளேட் குச்சிக்கிழங்கும்,மீன் குழம்பும், ஒரு வாத்து பிரைக்கு ரூ 800குடுத்து வாங்கிட்டு வந்தான்..இப்படி தான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கணும்கறது.ஆனாலும் எங்க யானை பசிக்கு அது சோளப்பொறியா தான் இருந்துச்சு.சிராங் (Boat Driver)எங்களை பாத்து பரிதாபட்டு இட்லியும் சாம்பாரையும் சாப்பிட தந்தார்.



இந்த மாதிரி படகுகளை ஏகப்பட்டதை பாக்கலாம்..நம்மள கடந்து போகும் போது டாட்டா காமிக்கறது,எங்கிருந்து வந்திருக்காங்கன்னு தெரிஞ்சக்கறதுன்னு.ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.




ரெஸ்ட் எடு்த்திட்டிருக்கற படகு..24 மணி நேரத்துக்கு வாடகைக்கு எடுத்தா சாயாங்காலம் அஞ்சு மணியோட ஏதாவது ஒரு கரையில் ஒதுக்கி நிறுத்திருவாங்களாம்...அடுத்த நாள் காலையோட போட்டிங் முடிஞ்சிரும்.இந்த படகை ஹனிமூன் படகுன்னு தான் அறிமுகபடுத்தினாங்க...இப்ப ஜாலிக்காக எல்லாருமே போட்டிங் பண்றாங்க.


வாத்து மேய்க்கறவரை போட்டோ எடுக்க மறந்திட்டோம்.ஒரு சின்ன படகில இந்த பக்கமும் அந்த பக்கமுமா ஓடி வாத்துகளை கரையேத்திட்டிருந்தார்..


பினிஷிங் பாயின்ட்க்கு முன்னாடி வந்த இடம்..இதோட ரெண்டு கரையிலும் வீடு,கடைக,ஸ்கூல்..அங்கங்க சின்ன கோவிலுங்களும் பாக்க ரொம்பவே வித்தியாசமா இருந்தது.


எல்லாரும் ஒரு நாள் பொழுதை இப்படி குடும்பத்தோட என்ஜாய் பண்ணி,வீட்டுக்கு வந்து மிச்ச மீதியெல்லாம் பேக் பண்ணி...ரெடி டூ கோன்னு அடுத்த நா காலையில ஏர்போர்ட் போனா...ஊரில இருக்கற ஆப்பெல்லாம் நம்மள தேடி தான் வரும்போல இருக்கு.......

Tamil Top Blogs

2 comments:

  1. கட்டுரை நெம்ப அருமை. நேர்ல பாக்கிற மாதிரி இருந்துச்சு. வாத்துக்க் கறி எப்பிடி இருக்கும்னு சொல்லுங்க.
    ஒர் சின்ன சஜ்ஜஷன்! இந்தப் பதிவை மட்டும் முதன் முறை படிக்கிறவிங்களுக்கு நீங்க சொல்றது எந்த ஊர்னு தெரியாது. கட்டுரை முச்சூடும் அது பத்திக் குறிப்பேயில்லை. ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரையின் தொடர்ச்சின்னாலும் பதிவின் ஆரம்பத்தில இடத்தின் பேரைச் சொல்லலாம். தப்பில்ல. மிகச் சிறந்த கட்டுரையாயினிக்குத் தெரியாதா என்ன?

    இப்படிக்கு,
    க.கா. (நீங்க எனக்குக் குடுத்த பேர்தான்)

    ReplyDelete
  2. வணக்கம் லதானந்த்!

    சுட்டி காட்டியதுக்கு நன்றி,சரி பண்ணிட்டேன்.வஷிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டமா...நன்றி...நன்றி.

    ReplyDelete