Wednesday, April 1, 2009

பிரிவில் ஒரு ஒற்றுமை






Tamil Top Blogs

எவ்வளவு ஒற்றுமை பார்த்தீங்களா!!! பெரியவ தான் டாம் எங்க வீட்டு இளவரசி,சின்னவ ஜெரி சின்ன அண்ணன் வீட்டு இளவரசி.இங்க குறும்பு பண்றதும்,ஜெயிக்கறதும் அவளே தான்.

ரெண்டு பேருக்கும் ஒண்ணரை வயசு வித்தியாசம்.ஆனாலும் சின்னவ தான் எப்பவும் அக்கா,சந்திக்கற ஒவ்வொரு முறையும் அன்பால நனைச்சுக்குவாங்க..எல்லாம் அரைமணி வாக்குல முடிஞ்சிடும்.அப்புறமென்ன நல்லா குடுமிபுடி சண்டை நடக்கும்.கூடவே சொந்தபந்தங்களையும்,வீட்டு பொருளையும் அவங்களுக்கு தகுந்த மாதிரி பங்கு போட்டுக்குவாங்க.

எப்பவும் இணை பிரிக்காம இருக்கறது டிரெஸிம்,விளையாட்டு பொருட்கள் தான்.அந்த விஷயத்தில் மட்டும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுகொடுக்கவே மாட்டாங்க.அதுவும் இவங்க ரெண்டு பேருக்கும் பிடித்த மாதிரி எடுக்கறதுகுள்ள எங்களுக்கெல்லாம் பைத்தியம் மட்டும் தான் புடிக்காது.சொந்தபந்தங்களுக்கெல்லாம் அன்பான வேண்டுகோள் கொடுத்துட்டோம்..எந்த பரிசு பொருளா இருந்தாலும் ஒரே மாதிரி ரெண்டு கொண்டுவரணும்னு.

இப்ப ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே மிஸ் பண்றாங்க..ஆனாலும் டிரெஸிம்,விளையாட்டு பொருளும் இப்பவும் ஒரே மாதிரி தான்.

4 comments:

  1. குட்டீசுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி லதானந்த் அவர்களே!.

    ReplyDelete
  3. இளவரசிகள் இதயத்தைக் கொள்ளை கொள்கிறார்கள்!

    ReplyDelete
  4. நன்றி ராமலக்ஷிமி மேடம்!.

    ReplyDelete