தினமும் தூங்குவதற்கு முன்னால் மகளுக்கு கதை சொல்லனும்.அதுவும் என்ன கதை சொல்லணும்கறதையும் அவளே தான் செலக்ட் பண்ணுவா...அப்படி இருக்கும் போது ஒரு நாள் சின்ட்ரெல்லா கதை சொல்லற நாளா இருந்தது.சரினு ஆரம்பிச்சேன் ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா அவங்களுக்கு ஒரே பெண் குழந்தை அது ரொம்பவும் அழகா இருந்ததால அதுக்கு பேரு சின்ட்ரெல்லா.
கொஞ்ச நாள் கழிச்சு அவளோட அம்மா செத்து போயிட்டாங்க அப்புறம் அவளோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரு,அப்பத்திலிருந்து சின்ட்ரெல்லாவுக்கு வாழ்க்கையை கஷ்ட்டமாயிடுச்சு.சரியான சாப்பாடு இல்ல நல்ல துண்மணிக இல்ல ஸ்கூலுக்கும் போகாம வீட்டு வேலையே கதினு கிடந்தா. சித்திக்கு பயந்துட்டு அப்பாவும் சப்போர்ட் பண்ணலை.
சித்தியோட பொண்ணுகளும் அவளை கொடுமைபடுத்தீனாங்க.இருந்தாலும் மனவேதனையோட எல்லா வேலைகளையும் செஞ்சு கொடுத்தா.நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவோட படத்தை எடுத்து வெச்சுகிட்டு மனசிலிருக்கறதையெல்லாம் சொல்லி அழுவா.அப்புறம் இராஜகுமாரன் வந்ததும் கடைசியில் அவளோட செருப்பை கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணினதையும் சொல்லி கதையை முடிச்சேன்.
இதை கேட்டுகிட்டிருந்த ரங்கமணி மக கிட்ட சொன்னார் நானும் சின்டரெல்லாவும் ஒரே மாதிரி சித்தி கிட்ட வளர்ந்தோம்.அதுல வர்ற மாதிரியே உங்கம்மாவும் எனக்கு ஷீ வாங்கி தந்துதான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டானு சொன்னார்.ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சா..அடுத்த நொடியே அவங்கப்பாவை பார்த்து, சித்தப்பாவை பாரு இண்டிகா காரை வாங்கிட்டு தானே சித்தியை கல்யாணம் பண்ணிகிட்டாரு..உனக்கு புத்தியே இல்லை இல்லைனா ஒரு ஷீக்காக இந்த அம்மாவை கல்யாணம் பண்ணியிருப்பியானு?? கேட்டா பாருங்க.எங்களுக்கு வாய் அடைச்சுபோச்சு.
அதுக்கப்புறம் அவளுக்கு (அம்மா இல்லாத)அப்பா கிட்டே ரொம்ப பிரியமும் மரியாதையும் கூடிடுச்சு.
அருமை
ReplyDeleteவாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
குழந்தைங்க புத்திசாலிங்க
ReplyDeleteஅதுங்களுக்கு தெரியுது
நமக்குத்தான் ..... என்னத்த சொல்லி ....
அருமைங்க,....
:)
நன்றி இது நம்ம ஆளு அவர்களே!
ReplyDeleteவருகைக்கு நன்றி நேசமித்ரன் அவர்களே!
ReplyDelete:)
ReplyDelete:) aahaa
ReplyDeleteவரவுக்கு நன்றி சென்ஷி அவர்களே!
ReplyDeleteவாங்க கயல்...வரவுக்கு நன்றி.
ReplyDeletehhmmm...kaasu vaangi kalyanam panrathu thappu-nnu solli kodukakaliya?
ReplyDeleteசின்ன குழந்தைகளின் புத்திசாலி தனத்திற்கு முன், நாம் எல்லாம்.....ஹ்ம்ம்ம்ம்....
ReplyDeleteஒண்ணுமே இல்லை.....
நல்லா எழுதி இருக்கீங்க.........
நிறைய எழுதுங்க........ வாழ்த்துக்கள்.....