Tuesday, July 21, 2009
டிரைவிங்கும் நானும்
ஊருக்கு கிளம்பும் போதே ரங்கமணியோட முதல் வேண்டுகோளே நான் டிரைவிங் கத்துக்கணும்கறது தான்.ஆனா நமக்கு தான் ரொம்ப தைரியமாச்சே அதனால அந்த பேச்சே எடுக்கலை.ஒரு நாள் அண்ணி டிரைவிங் க்ளாஸ் போகணும்னு சொல்லி என்னையும் கூப்பிட, துணைக்கு ஆள் கிடைச்சதேனு நானும் சரினு சொல்லிட்டேன்.ஸ்கூலையும் பார்த்துட்டு ரெஜிஸ்ட்டர் பண்ணிட்டு அண்ணி வேலைக்கு போறாதால எட்டு மணிக்கு முன்னாடி தான் க்ளாஸ் வேணும்னு சொன்னோம், அப்ப அவங்க சரி போன் பண்ணி சொல்றோம்னு சொல்ல நாங்களும் முன் பணத்தை கட்டிட்டு வந்துட்டோம்.
நாலு நாள் கழிச்சு போன் வந்துச்சு..தினமும் அரைமணி நேரம் வீதம் இருபது க்ளாஸூம் ஒரு மாசத்திலே லைசென்ஸூம் வாங்கி தர்றதா சொன்னாங்க.அடுத்த நாள் காலையிலே ஆறு மணிக்கு க்ளாஸூனு.அது வரைக்கும் ஒரே பரபரப்பா இருந்துச்சு.ஆல்டோ கார் தான் கேட்டிருந்தோம்..வந்துச்சு.அடுத்த மூணு நாளும் ஸ்டியரிங் பேலன்ஸூம் ஆக்சிலேட்டர் உபயோகிக்க பழகினோம் கூடவே எல். எல்லுக்கு வேண்டிய சிக்னல்ஸூம் இன்ஸ்டிரக்டர் சொல்லி குடுத்தார்.
அடுத்த வாரமே ஒரு நாள் ஆர்.டி.ஓ போயி ஆபிஸரை பார்க்க லைனில் நின்னோம்..அப்பவும் ஒரே படபடப்பு.எல்.எல்லுக்கு சிக்னல்ஸ் மட்டும் தான் கேப்பாங்களாம்.எனக்கு முன்னாடி அண்ணிதான் நின்னாங்க..டூ வீலர் ஓட்டறதால அவங்களுக்கு சிக்னல்ஸ் அத்துபடியாயிருந்தது.அண்ணிக்கு ஓ.கேயாயிடுச்சு. அடுத்தது நான்.ஒரு பொண்ணு தான் ஆபிஸர்,சிக்னல் போர்டில் கம்பல்சரி லெப்டை காமிச்சு அது ஏனு(அது என்னனு) சிக்னலு கன்னடாவில் கேட்க நா கொத்தில்லானு(தெரியாதுனு) சொல்ல அவங்களுக்கு ஒரே கடுப்பாயிடுச்சு.மறுபடியும் போர்டை காமிச்சு ஏனுல்லாம் கொத்திதையோ ஹேழினு (தெரிஞ்ச சிக்னல்ஸை சொல்லுனு) சொல்ல கடகடனு சொல்லிட்டு அவங்களை பார்த்தேன்..உடனே ஆயித்து ஓகினு (சரி போங்க) சொல்ல வெளியே வந்துட்டேன்.
எல்.எல்லும் கிடைத்தது. அப்புறம் ஒரு வாரம் க்ளச்சும்,பிரேக்கு,ஆக்ஸிலேட்டர் படாத பாடு பட்டுச்சு எங்க கிட்ட.ரெண்டாவது வாரத்திலே கியர் எப்படி மாத்தணும்னு சொல்லி கொடுக்க ஆரம்பிச்சாங்க கை வந்தா காலு வரமாட்டேங்குது, காலு வந்தா கை வரமாட்டேங்குது.. இன்ஸ்ட்ரக்டர் ரொம்ப நல்லவரு, இல்லைனா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு சொல்லி குடுக்க முடியுமா? அந்த ஒரு வாரத்திலே எப்படியோ தக்கி முக்கி ஒரளவுக்கு பழகிட்டோம்.அதுக்குள்ள வண்டிக்கு பிரச்சனையாம் ரெண்டு வாரம் ஒர்க்ஷாப்புக்கு போயிடுச்சு.பின்ன நாங்க படுத்தின பாட்டில வண்டி இருக்கறதே பெரிய விஷயம்.
கல்லை கண்டா நாயை காணோம், நாயை கண்டா கல்லை காணோம்கற மாதிரி இப்ப கார் வந்திருச்சு ஆனா இன்ஸ்டிரக்டர் வேலை விட்டு ஓடிபோயிட்டாராம்.புதுசா ஆளு வந்தவுடனே கூப்பிடறோம்னு வெயிட்டிங் லிஸ்டில போட்டுட்டாங்க.ஆனாலும் எங்க முயற்சியை நாங்க விடுமோமா..எல்.எல்லை வெச்சுகிட்டே அண்ணனோட மாருதி 800 டை ஒரு கை பார்த்துட்டு தான் இருக்கோம்.
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம் சிந்து சுபாஷ்
ReplyDeleteஇப்போது தான் முதன் முறையாக தங்கள் வலையை அறிந்தேன்...
இந்த "டிரைவிங்கும் நானும்" படிக்க ஆரம்பித்த போது, துபாயில் டிரைவிங் போனது பற்றித்தான் எழுதுகிறீர்களோ என்றவாறே படித்தேன்......
சரி, இப்போது நன்றாக கார் ஓட்டுகிறீர்களா? இங்கே துபாய் வந்த பின், லைசன்ஸ் எடுத்தாச்சா??
நேரம் கிடைக்கும் போது, என் வலைப்பதிவிற்கும் வருகை தாருங்கள். மத்திய கிழக்கு நாடுகள் பற்றி இங்கே எழுதுறேன்.....
www.edakumadaku.blogspot.com
சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றிய பல சுவாரசியமான செய்திகளுடன் இங்கே எழுதுறேன்..... வருகை தந்து, படித்து, தங்கள் கருத்துக்களை தவறாமல் தெரிவியுங்கள்.....
www.jokkiri.blogspot.com
உங்கள் வலைக்கு தொடர்ந்து வருவேன்.... நிறைய எழுதுங்கள்...... வாழ்த்துக்கள்.....
பரவாயில்லயே ஓட்டறீங்களா.. நான் லைசென்ஸ் மட்டும் .. மட்டும்ங்கறத நல்லா கவனிக்கனும்.. வச்சிருக்கேன்..:)
ReplyDeleteவரவுக்கு நன்றி கோபி அவர்களே!
ReplyDeleteமுதலில் இங்க லைசென்ஸ் வாங்கிட்டு தான் அங்க வந்து வாங்கணும்னு இருக்கேன்.
இதோ வந்துட்டே இருக்கேன்.
வரவுக்கு நன்றி முத்துலெட்சுமி!
ReplyDeleteஇதையாவது ஒழுங்கா கத்துக்கலாம்னு தான் இவ்வளவு முயற்சி பண்ணிட்டிருக்கேன்.
அட உங்களுக்காவது 4 வீலர். எனக்கு 2 வீலர்க்கு எல்-கு போனப்போ டிரைவிங் ஸ்கூல் ஆளு அடயாளத்த லெப்ட் லெக் ரைட் லெக்னு மாத்தி போட - அது தெரியாம வலது கால்ல ஸ்கேர் இருக்கே எப்படி பேலன்ஸ் பண்ணுவீங்கன்னு RTO கேக்க நா உடனே என்னோட இடது கால காமிச்சு இல்ல சார் இப்போ நல்லாதான் இருக்கு-னு சொல்ல என்ன நினச்சாரோ கையெழுத்த போட்டு போங்கன்னாரு. இன்னும் அத சொல்லி சிரிப்பு தான் எங்களுக்கு.
ReplyDeleteவணக்கம் ஸ்ரீஜா அவர்களே!
ReplyDelete91 ல் டூ வீலர் ஓட்ட ஆரம்பிச்சது..இப்ப தான் லைசென்ஸ் வாங்க காலம் கனிஞ்சது..அது கூட 4 வீலர் லைசென்ஸையும் வாங்கிட்டேன்.