மேக்கேதாட் அப்படினா ஆடு தாண்டுச்சுனு அர்த்தம்.வருஷங்களுக்கு முன்னால் இக்கரை பாறையிலிருந்து அக்கரை பாறைக்கு ஆடு தாண்டி போகுமாம்.பெங்களூரில் இருந்து 98 கிலோமீட்டர் தூரத்தில் கனக்புரா அப்படிங்கற ஊரில் இருக்கு.இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் இருக்கு அது காவேரி,அர்க்காவதிங்கற இரண்டு நதிகளின் சங்கமம்.
என்னோட அண்ணிக்கு ஊரைவிட்டு வெளியே யாரும் இல்லாத இடத்தில் போய் லன்ச் சாப்பிடனும்னு ஆசை.எங்க போறதுனு யோசிச்சப்ப இந்த இடம் ஞாபகம் வந்து கிளம்பிட்டோம்.எந்த முன்னேற்பாடும் இல்லாம போனதால நல்லாவே என்ஜாய் பண்ணமுடிஞ்சது.
காலையில பதினோரு மணிவாக்கில வீட்டை விட்டு கிளம்பினோம்.போற வழியில் சாப்பாடு பார்சல் பண்ணி வாங்கிட்டோம். ஒரு மணிக்கு சங்கமத்துக்கு போய் சேர்ந்தோம்..ஆனா காரை விட்டு வெளியே வரவேண்டியிருக்கலை.எங்க பார்த்தாலும் ஒரே ஆண் தலைக தான் தெரிஞ்சுது அது கூட பாட்டில்கள் சங்கமமா இருந்தது.அப்படியே காரை யூ டர்ன் பண்ணிட்டோம்.
மேலே இருக்கற படங்கள் சங்கமத்துக்கு போற வழியில எடுத்தது.இந்த இடங்களை நேரில் பார்க்கும் பொழுது அழகோ அழகு.திரும்பி வர்ற வழியில் சாப்பாடும் ஆச்சு.
அங்கிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் தான் மேக்கேதாட் இருக்கு.இனி அடுத்தது அங்க போய் பார்க்கலாம்னு கிளம்பிட்டோம்.போற வழியில் இரண்டு பக்கமும் அழகான மலைகள்,ஆடு,மாடு,தோட்டம்..சின்ன சின்ன வீடுகள் எல்லா வீடும் ஒரே கலர் பெயிண்ட்.விட்டு வர மனசே இருக்கலை.சங்கமம் மாதிரி தான் இங்கயும் இருக்குமோ கலக்கமா இருந்துச்சு..ஆனா பராவாயில்லை ஓரளவு நல்லாவே இருந்துச்சு.ஆறும் அவ்வளவு அமைதியா இருந்தது.
அங்க வந்தவங்க எல்லாரும் அக்கரைக்கு போறதை பார்த்துட்டு நாங்களும் பரிசலில் போனோம். ஒரு ஆளுக்கு 40 ரூபாயாம்..பகல் கொள்ளை.
அந்த பக்கம் போயி பார்த்தா ஒண்ணுமேயில்லை.அடடா ஆளுக்கு 40 ரூபா போயிருச்சேனு நினைச்சோம்..அப்ப தான் இந்த பஸ் வந்தது..இதிலயும் தலைக்கு 40 ரூபா.பஸ்ஸை பார்க்கவே ஒரு மார்க்கமா இருந்துச்சு.
இந்த பஸ்ஸையும் நம்பி ஏறிட்டோம்..காடு மலையெல்லாம் ஏறி இறங்கி மொத்தத்தில் அடி வாங்காம இந்த பஸ்ல போறதுக்கு ஒரு திறமை இருக்கணும்னு பேசிகிட்டே போனோம்.அங்க போயி என்ன இருக்குனு பார்த்தா..அவ்வளவு அமைதியா இருந்த ஆறா இதுனு ஆச்சர்யபடவெச்சிருச்சு.அதுவும் பாறை மேல நின்னு தான் கீழே பார்க்கனும்.இதில் குடிமக்கள் பலபேரு விழுந்தும் சங்கமம் ஆயிருக்கங்களாம்.
கடைசி டிரிப் இதுதான் சொல்லி 10 பேர் போக வேண்டிய பஸ்ல 30 பேரை ஏத்தி,பஸ்ல தொங்கிட்டு தான் போனோம்.அக்கரைக்கு வந்து சேர்ந்த பொழுது இருட்டவும் ஆரம்பிச்சுது..சரி இனி கிளம்பவேண்டியது தான்னு திரும்ப வந்திட்டிருந்தோம்.அப்ப ஓரிடத்தில் மூணு யானைக நின்னதை பார்த்தோம்.அதை பார்த்த பயத்தில் நான் சத்தம் போட அதை கேட்டு எங்களை துரத்த வர காரு நூறு கிலோ மீட்டர் வேகத்திலே பறந்ததுனு சொல்ல வேண்டியதியில்லை.அவங்க போட்டோ தான் கீழே இருக்கு.
வீடு வந்த சேர்ற வரைக்கும் அதே பேச்சா இருந்தது.ஆனாலும் மனநிறைவை தந்த ஒரு டிரிப் இது.
HI, Iam behind you. Good luck!
ReplyDelete//மேக்கேதாட் அப்படினா ஆடு தாண்டுச்சுனு அர்த்தம்.//
ReplyDeleteதகவலுக்கு நன்றி சிந்து....
//எந்த முன்னேற்பாடும் இல்லாம போனதால நல்லாவே என்ஜாய் பண்ணமுடிஞ்சது.//
இது ஒரு சூப்பர் ஐடியா... இதையும் ஒரு தடவையாவது ட்ரை பண்ணி பார்க்கணும்...
//காரை விட்டு வெளியே வரவேண்டியிருக்கலை.எங்க பார்த்தாலும் ஒரே ஆண் தலைக தான் தெரிஞ்சுது அது கூட பாட்டில்கள் சங்கமமா இருந்தது.//
நீக்கமற நிறைந்திருந்தாங்கன்ற மாதிரி.... நல்லதுதான் இறங்காதது...
//இந்த இடங்களை நேரில் பார்க்கும் பொழுது அழகோ அழகு.//
கண்டிப்பாக இருந்து இருக்கும்... போட்டோவிலேயே இவ்ளோ அழகா, பசுமையா இருக்கே...
//போற வழியில் இரண்டு பக்கமும் அழகான மலைகள்,ஆடு,மாடு,தோட்டம்..சின்ன சின்ன வீடுகள் எல்லா வீடும் ஒரே கலர் பெயிண்ட்.//
விவரிப்பும், வர்ணனையும் ரொம்ப நல்லா இருக்கே...
//பரிசலில் போனோம். ஒரு ஆளுக்கு 40 ரூபாயாம்..பகல் கொள்ளை.//
பின்னே. வர்றவங்க கிட்ட தானே கொள்ளை அடிக்க முடியும்...
//அந்த பக்கம் போயி பார்த்தா ஒண்ணுமேயில்லை.அடடா ஆளுக்கு 40 ரூபா போயிருச்சேனு //
ஆ...ஹா... வட போச்சே...
//காடு மலையெல்லாம் ஏறி இறங்கி மொத்தத்தில் அடி வாங்காம இந்த பஸ்ல போறதுக்கு ஒரு திறமை இருக்கணும்னு பேசிகிட்டே போனோம்.//
ஒரு மார்க்கமா தான் இருந்ததுன்னு சொல்லுங்க...
//இதில் குடிமக்கள் பலபேரு விழுந்தும் சங்கமம் //
சூப்பர் விளக்கம்...
//மூணு யானைக நின்னதை பார்த்தோம்.அதை பார்த்த பயத்தில் நான் சத்தம் போட அதை கேட்டு எங்களை துரத்த வர காரு நூறு கிலோ மீட்டர் வேகத்திலே பறந்ததுனு //
பயங்கர திகிலா இருந்திருக்குமே... நல்ல வேளை...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...
//வீடு வந்த சேர்ற வரைக்கும் அதே பேச்சா இருந்தது.ஆனாலும் மனநிறைவை தந்த ஒரு டிரிப் இது.//
வாழ்த்துக்கள்....உங்க கூட நாங்களும் ட்ரிப் போன மாதிரி இருந்தது சிந்து... நல்ல எழுதி இருந்தீங்க...
Thanks YIU
ReplyDeleteவணக்கம் கோபி அவர்களே!
ReplyDeleteநான் எழுதினதை விட உங்களுடைய பின்னூட்டம் தான் அருமையா இருக்கு. நன்றி! நன்றி!.
:) அழகான இடமா இருக்கே..
ReplyDeleteவணக்கம் முத்துலெட்சுமி!
ReplyDeleteபார்க்கவும் ரசிக்கவும் ஏத்த இடம் தான்.