பெங்களூரின் முக்கியமான மால்களில் ஒன்று.இங்க பிராண்டடு(துட்டு பத்தி கவலை இல்லாத)கடைக மட்டும் தான் இருக்கும்.சில சைனா ஐட்டங்களும் இருக்கு..தரத்தை பத்தி சொல்ல வேண்டியது இல்லைனு நினைக்கறேன்.ஓரளவுக்கு எல்லாராலும் வாங்க முடியற துணிக்கடைனா வெஸ்ட்சைடை(Westside)சொல்லலாம்.பொழுது போக்கவும்,பார்க்கிங் பண்ண இடமும் கிடைச்சா நல்ல இடம்.
இது தான் கிரவுண்ட் ப்ளோர் எப்பவுமே டி.ஜே அல்லது வி.ஜேக்களோட ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகிட்டே இருக்கும்.போன வருஷம் சில ப்ரொபஷனல் டேன்சர்ஸ் கூட என் பொண்ணும் டேன்ஸ்(அப்படினு மனசை தேத்தி) பண்ணினா.குக்கீஸ்,ஐஸ்க்ரீம்,ஹோம்மேடு சாக்லேட்ஸ்,கார்ன்‘ஸ்.ப்ரெஸ் ஜீஸ்னு இந்த தளத்திலும் கிடைக்கும்.
முதல் தளத்திலிருந்து அஞ்சாவது வரைக்கும் போக எலவேட்டரும், எஸ்கலேட்டரும் படிகளும் இருக்கு.ரொம்பவே குறுகலான எஸ்கலேட்டர்..அதுக்கே கீழே மேலேனு செக்கியூரிட்டி.திருப்பதி தான் ஞாபகத்துக்கு வருது.
இது தீபாவளி கொண்டாட்டத்தின் விளக்குகள்.எல்லா கடைகளிலும் 10 முதல் 50% வரை தள்ளுபடி விற்பனை.டெம்பரவரி டாட்டூ போடும் கடைகளில் குட்டீஸ்களின் கலாட்டா...இந்த டிசைன் அந்த டிசைன்னு..அதுக்கு 50 மற்றும் 100 ரூபாய்.அடுத்தது புட்கோர்ட்..கொள்ளை விலைக்கு கொஞ்சமே கொஞ்சமே எல்லாம் சாப்பிடக்கிடைக்கும்.இங்க சில பேரு நாகரீகமா சாப்பிடற ஸ்டைலை பார்த்தா ஏன்தான் இப்படி சாப்பிடகூட நடிக்கறாங்களோனு தோணுது.
அதே போல ஒரு சாரர் கல்யாணத்துக்கு போற மாதிரியும் சில பேருங்க நமீதாவுக்கு தங்கச்சி மாதிரியும் வந்திருவாங்க..இதையெல்லாம் பார்க்கறதுக்கு ஒரு கூட்டம் எப்பவும் ஸ்குவாடு மாதிரி சுத்திகிட்டே இருக்கும்.இங்க (PUB)பப்பும் இருந்தாலும் ரொம்பவே சைலண்ட்டா தான் இருக்கு(அப்ப இருந்தது).வீடியோ கேம்ஸ், சினிமா ஹால்ஸ்,நகைக்கடை, காபி ஷாப்ஸ்னு அடுக்கிட்டே போலாம்.
இங்க Tresspassனு ஒரு பியூட்டி பார்லரில் பார்த்தது...நாலா பக்கமும் க்ளாஸ் வழியா உள்ள பாக்க முடியும்.ஒரு பக்கம் ஆணுக்கு முடி வெட்டு, அதுக்கு பக்கத்திலேயே பொண்ணுக்கு பெடிக்யூர் பண்ணிட்டு இருக்காங்க, இப்படி பல பேர் உள்ள.வெளியே பத்து பேர் அப்பாயின்மெண்ட்டோட வெயிட்டிங்.
இந்த வலை போடறதுக்கு ஒரு காரணம் இருக்கு போன வருஷம் ஒரு குழந்தை மேலேயிருந்து எட்டி பார்க்கும் பொழுது கீழே விழுந்து இறந்துவிட்டது..அந்த அசம்பாவிதத்துக்கப்புறம் இப்படி வலை போட்டு பாதுகாப்பை ஏற்படுத்திட்டாங்க.
நன்றாக விவரித்திருக்கிறீர்கள். படங்களும் அருமை சிந்து.
ReplyDeleteஅச்சச்சோ.............
ReplyDelete//கருடா மால்
ReplyDeleteபெங்களூரின் முக்கியமான மால்களில் ஒன்று.//
சிந்து... பெங்களூர்ல எங்க இருக்குன்னு லொக்கேஷன் சொல்லி இருக்கலாமே..
//ஓரளவுக்கு எல்லாராலும் வாங்க முடியற துணிக்கடைனா வெஸ்ட்சைடை(Westside)சொல்லலாம்.//
கரெக்ட்... நாட் ஸோ காஸ்ட்லி...
//சில ப்ரொபஷனல் டேன்சர்ஸ் கூட என் பொண்ணும் டேன்ஸ்(அப்படினு மனசை தேத்தி) பண்ணினா//
ஹா..ஹா..ஹா... நாமளே இப்படி சொன்னா எப்படிங்கோ??
//புட்கோர்ட்..கொள்ளை விலைக்கு கொஞ்சமே கொஞ்சமே எல்லாம் சாப்பிடக்கிடைக்கும்//
இதானே ஃபுட்கோர்ட்டின் தாரக மந்திரமே!!...
//அதே போல ஒரு சாரர் கல்யாணத்துக்கு போற மாதிரியும் சில பேருங்க நமீதாவுக்கு தங்கச்சி மாதிரியும் வந்திருவாங்க..இதையெல்லாம் பார்க்கறதுக்கு ஒரு கூட்டம் எப்பவும் ஸ்குவாடு மாதிரி சுத்திகிட்டே இருக்கும்.//
காண கண் கொள்ளா காட்சியை யாராவது பார்க்காமல் விடுவார்களா என்ன??
//போன வருஷம் ஒரு குழந்தை மேலேயிருந்து எட்டி பார்க்கும் பொழுது கீழே விழுந்து இறந்துவிட்டது..அந்த அசம்பாவிதத்துக்கப்புறம் இப்படி வலை போட்டு பாதுகாப்பை ஏற்படுத்திட்டாங்க.//
அய்யோ... ம்ம்ம்... கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்... நல்ல வேளை, இப்போவாவது வலை போட்டார்களே...
உங்களுடன் இணைந்து நானும் கருடா மால் ஒரு ரவுண்டு போய்ட்டு வந்தாச்சு... (ஓசில...) தாங்க்ஸ் சிந்து...
வணக்கம் ராமலக்ஷ்மி மேடம்!
ReplyDeleteவரவுக்கு நன்றி.உங்க பின்னூட்டத்தை பார்த்து தான் மனசு சமாதானம் ஆச்சு.
வணக்கம் டீச்சர்!
ReplyDeleteஇப்படி யாருக்காவது ஆகும்போது தான் நம்மாளுக திருத்த முயற்சிக்கறாங்க.
வணக்கம் கோபி அவர்களே!
ReplyDeleteஎம்.ஜி மற்றும் ரெசிடென்சி ரோடுக்கு இடையில் உள்ளது.விவேக் நகர் னும் சொல்லலாம்.
எப்பவும் போல உங்க பின்னூட்டம் பதிவை விட நல்லா இருக்கு. நன்றி.
//sindhusubash said...
ReplyDeleteவணக்கம் கோபி அவர்களே!
எம்.ஜி மற்றும் ரெசிடென்சி ரோடுக்கு இடையில் உள்ளது.விவேக் நகர் னும் சொல்லலாம்.
எப்பவும் போல உங்க பின்னூட்டம் பதிவை விட நல்லா இருக்கு. நன்றி.//
********
தன்யனானேன் சிந்து....