Friday, October 16, 2009

Coorg - கூர்க்

மலைகளும் காபிதோட்டங்களும் சூழ்ந்திருக்கும் இடம் தான் கூர்க்.பெங்களூரில் இருந்து 260 கிலோமீட்டரில் தூரத்தில் இருக்கும் ஒரு மாவட்டம். கர்நாடகத்தில் இருந்தாலும் கலாசாரம்,உணவு,மொழி,திருமணம் எல்லாம் வேறுபட்டு தான் இருக்கு.கன்னடா பேச தெரிந்தாலும் குடவா தான் அவங்க தாய்மொழி.இந்திய மொழிகளின் கலவையா இருக்கறதால ஓரளவுக்கு புரிஞ்சிக்க முடியும்.

மைசூர் வழியா போனா குஷால் நகர்,சொண்டிகுப்பா,மடிக்கேரி என்கிற மர்க்காரா போன்ற இடங்களில் தங்குவதற்கு தேவையான ஹோட்டல்களும், ஹோம்ஸ்டே மற்றும் ரிசாட்டுகளும் உள்ளது.ஹோம்ஸ்டே தான் இங்கு மிக பிரபலம்.சின்ன சின்ன ஹட்டிலிருந்து பெரிய பங்களா வரைக்கும் வாடகைக்கு கிடைக்கும், தேவையானால் சமையல்காரரும்,நாமே சமைக்கும் வசதியும் இங்கு உண்டு.



நாங்க தங்கியிருந்த ஹோம்ஸ்டேயின் ஒரு பக்கத்து தோட்டம் தான் மேலேயிருக்கும் போட்டோ.



இந்த இடத்துக்கு பேரு ராஜா சீட்.இங்க ஒரு சின்ன மண்டபம் இருக்கு ராஜா ராணி இருந்த காலத்தில் தினமும் சூரிய அஸ்தமனத்தை பார்க்க இங்க வந்ததால இந்த பேரும் வந்திருச்சு.பனிமூட்டத்தால் போட்டோ சரியா எடுக்கமுடியலை.



இது பாகண்டேஸ்வரர் கோவில் முகப்பு.சிவன் தான் இங்கு முக்கிய தெய்வம்..வழிபாடு முறைகள் அப்படியே கேரளாவை ஒத்து இருக்கு.இந்த கோவிலுக்கு எதுத்தாப்பலேயே காவிரி ஆறும் ஓடுது.இந்த ஊரை சேர்ந்தவங்க அவங்க குடும்பத்தில் யார் இறந்தாலும் இங்க வந்து காவிரியில் கரைச்சுட்டு சிவன் கோவிலில் பூஜை செய்வாங்களாம்.தலைக்காவேரி போகும் வழியில் இந்த கோவில் இருப்பதால் இங்க தான் முதல் விசிட்.



தலைக்காவேரி போகும் வழியில் எடுத்த போட்டோ இது..மதியம் 12 மணிவாக்கில் இப்படி இருந்தா விடிகாலையில் எப்படி இருந்திருக்கும்?



இது தலைகாவேரியின் அடிவாரம்.இதுக்க மேல இருக்கிற எல்லா இடங்களிலும் போட்டோவோ வீடியோவோ எடுக்ககூடாதுனு அறிவிப்பு இருந்ததால எதுவும் எடுக்கலை.எனக்கு இந்த இடத்துமேல ஒரு ஈர்ப்பும் இருக்கு..சின்ன வயசில்,பட பேரு ஞாபகம் இல்லை. சிவாஜியும் மஞ்சுளாவும் சேர்ந்து இங்க குறிஞ்சி மலர்களேனு பாடுவாங்க..அதையே எதிர்பார்த்து தான் போனேன் ஆனா இப்ப மார்பிள் போட்ட கோவிலை தான் பார்க்க முடிஞ்சது.

அடிவாரத்தில் இருந்து 20 படிகள் தான் இருக்கும்,பனிமழை பொழியறதால காலு அதுக்கே உணர்வில்லாம போயிடுது..ஆனா அங்க இருக்கும் பூஜாரிகள் பஞ்சகச்சம் ஒரு அங்கவஸ்திரத்தோட இருக்காங்க.இங்கயும் தட்டு நிறைய காசுக்கு தான் ஆரத்தி கிடைக்கும்.காவேரி தொடங்கிற இடமானதால் ஒரு வித சிலிர்ப்பு உண்டாகுது.அந்த தண்ணியை யாரும் தொட அனுமதியில்லை,டிரம்களில் தண்ணி நிரப்பி வெச்சிருக்காங்க அதையே தான் எடுத்து குளிக்கவோ,குடிக்கவோ முடியும்.



இது அபி (ABBI) அருவி.பத்தடிக்கு முன்னாடியே வேலி போட்டு இருக்கு.கார்டும் இருக்கறதால எல்லை தாண்டி எங்கயும் போக முடியாது.கொள்ளை அழகு..விட்டு வர மனசு கொஞ்சம் வலிக்கும்.



இது அரபிக் காபியின் செடி.இந்தியன் காபி கொட்டைக்கு விலை கம்மி அதனால் அதை விட மகசூலும் விலையும் தருகிற இந்த காபி கொட்டைக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.






இது திபெட்டியன் காலனியில் இருக்கும் புத்தா தங்க கோவில்.ஒரு கிராமம் முழுதும் இவங்க குடியிருப்பு. எங்கு காணினும் புத்த பிட்சுக தான் அதுவும் நாலு வயசிலிருந்து.குட்டி பிட்சுக அழகோ அழகு.ரொம்பவே அமைதியான புத்த மடம்.

எல்லா அவசரகதியை விட்டு அமைதியா இருக்க ஏத்த இடம்.வித்தியாசமான உணவுகள்..கடுபூ என்கிற கொழுக்கட்டை,தரிப்புட்டு, கீமா தோசை,அட்டகாசமான காபி.மியூசியம்,இஸ்லாமிய முறைப்படி கோபுரம் இருக்கும் சிவன் கோவில்,அரண்மனை இன்னும் சில பல மிஸ் பண்ண தோணாத இடங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்.
Tamil Top Blogs

6 comments:

  1. கூர்க்...

    சிந்து, உங்க‌ள் க‌ட்டுரையை ப‌டித்தாலே கூர்க் போய்விட்டு வந்த‌ ஒரு உண‌ர்வு ஏற்ப‌டுகிற‌து... அதுதான் உங்க‌ள் எழுத்தின் வெற்றி...

    ஃபோட்டோஸ்... எழுதின‌ வித‌ம்... எல்லாம் அச‌த்த‌ல் ர‌க‌ம்...

    ப‌திவுற்கு ந‌டுவில் ரொம்ப‌ இடைவெளி இருக்கே சிந்து... இன்னும் நிறைய‌ எழுத‌லாமே...

    என் தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌ரிசு வாங்கியாச்சா... இல்லேன்னா இங்க‌ வந்து, ம‌ற‌க்காம‌, ம‌றுக்காக‌ வாங்கிக்கோங்க‌...

    ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  2. வணக்கம் திகழ் அவர்களே!

    வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் கோபி அவர்களே!

    கூர்க்கில் இருந்தது மூணு நாள்..நிறைய எழுதணும்னு நினைச்சு ரொம்பவே சுருக்கிட்டேன்னு தோணுது.

    உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, மகிழ்ச்சியும் கூட.

    நிறைய விஷயங்களை எழுதனும்னு நினைக்கறேன் ஆனா எழுதலாமா வேண்டாமாங்கற குழப்பத்தினால ரொம்பவே இடைவெளி வந்துருது.

    தீபாவளி பரிசு கிடைச்சிருச்சு,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் Barari அவர்களே!

    வரவுக்கும் பட தகவலுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete