Wednesday, February 17, 2010
வேலன்டைன்ஸ் டே
2000ம் வருஷம் ஜீலையில்,நா வேலை செய்திட்டிருந்த யூனிட்டில் ஒரு நாள் ஹெச் ஆர் ஆப்பிசர் என்கிட்ட நாளைக்கு ஹெட்ஆபிஸ் ஐ.டியிருந்து சுபாஷ்ன்னு ஒருத்தர் வருவார்..புதுசா ஒரு சாப்ட்வேர் டெவலப் பண்ணியிருக்கராம் அதை நீ யூஸ் பண்ற கம்பியூட்டரில் இன்ஸ்டால் பண்ணி உனக்கு டிரெயினிங் குடுப்பார்ன்னு சொன்னார்.நானும் சரி சரின்னு தலையாட்டுனேன்.ஏன்னா இதுக்கு முன்னாடி ஐ.டியிலிருந்து வந்தவங்க எல்லாம் மிடில் ஏஜ் ஆசாமிங்க...நாம ஏதாவது சந்தேகத்தை கேட்டுட்டா போதும் உடனே ..நாங்க யாரு தெரியுமில்ல(வர்றதே பேக்அப் எடுக்கறதுக்கு)..இந்த மாதிரி கேள்வியெல்லாம் எங்க கிட்ட கேக்ககூடாதுன்னு சீன் போடுவாங்க...அந்த மாதிரி தான் இருக்கும்னு நினைச்சேன்.விதி யாரை விட்டது.
அடுத்த நாள் காலைல பதினோரு மணிவாக்கில் நெடு நெடுன்னு உயரமா நெத்தியிலே திருநீறு கையில ஹெல்மெட்டோட ஒரு ஆளு ஆபிசுக்குள்ளே வந்தார்..யாருன்னு விசாரிக்கறதுகுள்ள மேனேஜர் வந்து ஹாய்ன்னு சொல்லி அவரோட கேபினுக்குள்ள கூட்டிட்டு போயிட்டார்..பின்னாடியே ஹெச் ஆர் ஆபிசரும் போயி அரைமணி நேர டிஸ்கஷன் முடிஞ்சு வெளிய நேரா என் டேபிளுக்கு வந்து ..இவர் தான் சுபாஷ்...இவங்க சிந்துன்னு அறிமுகபடுத்த...அதிர்ச்சியா தான் இருந்துச்சு..பின்ன ஒரு மிடில் ஏஜ் ஆளை எதிர்பார்த்திட்டிருக்கும்போது இப்படி ஒரு யங்மேன் வந்து நின்னா......
ரெண்டு நாள்ல இன்ஸ்லேஷன் பண்ணிட்டு ஒரு நாள்ல டிரெயினிங் முடிஞ்சிடும்னு சொன்னார்...சோ ரெண்டு நாளைக்கு எனக்கு சிஸ்டத்திலே வேலை இல்லைன்னு ஒரே குஷியா இருந்துச்சு...முத நாளு யூனிட்டுகுள்ளே ஒவ்வொரு செக்ஷ்னா போயி எல்லார் கூடயும் அரட்டை கச்சேரி நடத்திட்டு என் டேபிளுக்கு வந்தா ஹெச் ஆர் ஆபிசர் கூப்பிட்டு நீ தான் டிரெயினிங் எடுக்கணும்..இப்படி கேர்லஸ்ஸா அங்க இங்கயும் சுத்திட்டு இருக்காதேன்னு ரொம்ப அன்பா சொன்னார்.அடுத்த நாளு சீட்டை விட்டு எங்கயும் போகமா இவரு பண்றதை கர்ம சிரத்தையா கவனிக்காம நா பாட்டுக்கு கேள்வி மேல கேள்வி கேட்டு சரியா கடுப்படிச்சேன்.எவ்வளவு நேரந்தான் நல்லவனா நடிக்கமுடியும்...கடைசியிலே ரொம்ப பொறுமையா சொன்னார்...உங்களுக்கு சொல்லிகுடுக்கும் போது உங்க சந்தேகத்தையெல்லாம் கேளுங்க..இப்ப தயவுபண்ணி எந்திரிச்சுபோங்கன்னு சொன்னார்...இருப்பனா அங்க?
நாங்க தான் முப்பெரும் தேவியராச்சே...உடனே அவங்க ரெண்டு பேர்கிட்டயும் இதை சொல்லணுமே..இனி எப்படி கலாய்க்கறதுன்னும் பிளானிங் வேற.அடுத்த நாளே டிரெயினிங்கும்...நம்ம மரமண்டைக்கு ஒண்ணும் ஏறலை..எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையை ஆட்டிவைச்சேன்.இது ஃபாக்ஸ்ப்ரோவில் பண்ணின பேரோல் ப்ரோகிராம்..பதினைந்து நாளுக்கு ஒரு தடவை பேரோல் ரெடி பண்ணனும்..அதுல சம்பள கணக்கை எண்ட்ரி கொடுத்தா ஈ.எஸ்.ஐயும்,பி.எப்பும் கட்டாகி பேலன்ஸ் இவ்வளவுன்னு காமிக்கணும்..அதுல எப்ப பண்ணினாலும் பி.எப் அமவுண்ட் டேலியே ஆகாது..அதை மேனுவலா பண்ணனும்...இதுக்கு மேனுவலாவே பண்ணிக்கலாம்னு நான் ஹெ.ஆர் ஆபிசர்கிட்ட சண்டை போடுவேன்..உடனே அவரும் போனை போட்டு..சுபாஷ் அர்ஜண்ட் ஹியர் கூப்பிட இவரு இப்ப வரமுடியாது நாளைக்கு வர்றேனு சொல்லுவார்.
என்ன ப்ரோகிராம் பண்ணினாரோ..ஒவ்வொரு தடவையும் அவர் வந்தா தான் பேரோலே ரெடியாகும்.இப்படி வந்து வந்து எங்க கேங் கூட ஹாய் ஹலோ சொல்லிக்கறளவு பேசுவார்.இப்படி இங்க வரும் போது அடிக்கடி மேனேஜர் கூட காணாம போயிடுவார்...அதையும் கண்டுபிடிப்பம்ல்ல...வேற எதுக்கு தம்மடிக்க தான்..அதை கேட்டபோது வழிஞ்சார் பாருங்க...ஐயோ எனக்கு இது ஹேபிட் இல்ல சும்மா அவருக்கு கம்பெனி குடுக்க தான் போனேன்னு.இவரு இப்படியெல்லாம் நல்லவருன்னு சொன்னா நம்பிடுவோமா...எங்க கேங்கில் ஒரு பாலிஸி வெச்சிருந்தோம் வாரத்திலே ஒரு நாள் லன்ச் வெளியே..அதை வாரத்துக்கு ஒரு ஆள் செலவு பண்ணனும்..அப்படி சில சமயம் நாங்க போகும் போது இவர் எங்க ஆபிஸில் இருப்பார்..ஆனா நாங்க யாருமே அவரை லன்ச்சுக்கு கூப்பிடலை.ரெண்டு மூணு தடவை அவரும் கண்டுக்கலை..ஆனா மனசில இருந்திருக்கும் போல.ஒரு தடவை கேட்டே கேட்டுட்டார்..என்னை மட்டும் ஏன் கூப்பிடறதுயில்லைன்னு!!!
அதுக்கு நா சொன்னேன்..நெக்ஸ்ட் வீக் என்னோட டர்ன்..அப்ப போன் பண்றேன்..வாங்கன்னு சொன்னேன்..ஆனா லன்ச்சுக்கு போகலாம்னு போன் பண்ணின போது இப்ப வரமுடியாதுன்னு சொல்லிட்டார்..ரொம்ப தான் பிகு பண்றார்னு நாங்களும் விட்டுட்டோம்.திடீர்னு ஒரு நாள் வந்து இன்னைக்கு எல்லாரும் லன்ச்சுக்கு போகலாம்னு கூப்பிட்டார் என்னை தவிர மிச்ச மூணு பேரும்(ரெண்டு பொண்ணுக,ஒரு பையன்) இன்ஸ்பெக்ஷன் நடந்திட்டிருக்கு அதனால இன்னைக்கு போகமுடியாதுன்னு சொல்ல, உடனே இவர் நா உங்களுக்காக தான் ஆபிஸில் பர்மிஷன் எடுத்துட்டு வீட்டுக்கும் லன்ச்சுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டேனேனு சொல்ல நாங்க அதனால என்ன இப்ப வீட்டுக்கு போனா சாப்பிட முடியாதானு கேக்க அவருக்கு முகமெல்லாம் ஒரு மாதிரியாயிடுச்சு.
நாங்க நாலு பேரும் சேர்ந்து முடிவு பண்ணி அன்னைக்கு நான் மட்டும் அவர்கூட லன்ச் சாப்பிடபோனேன்.அதுக்கு பிறகு நிறைய தடவை எங்க கேங்கோட அவுட்டிங்கில் அவரையும் சேர்த்துகிட்டோம்.அடுத்ததா வேற ஏதோ ஒரு புது சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணவும்,டிரெயினிங் பண்ண சென்னையிலிருந்து வந்த ஒரு இன்ஜினியரோட வந்தாங்க.இந்த தடவை மூணு மாசத்துக்கும் மேலா தினமும் இவங்க டீம் வந்து போயிட்டிருந்தது.அப்படி ஒரு நாள் நாங்க பேசிட்டிருக்கும் போது கேஷுவலா நா உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறேன் சொல்ல..என்னை கலாய்க்கதான்னு நினைச்சு..ஓஓஓ சரி எங்க வீட்ல வந்து கேளுங்க..எல்லாரும் சரின்னு சொன்னா நா ஒத்துக்கறேன்னு (அவர் என்னை கிண்டல் பண்றதா நினைச்சு)சொன்னேன்.அப்ப அது விளையாட்டா தான் தெரிஞ்சுது அதனால அதை அப்பவே மறந்துட்டேன்.
ஆனா அவர் நிஜமாவே அவங்க வீட்ல சொல்ல, அவங்க அப்பாவுக்கு டென்ஷனாயிடுச்சு..வீட்ல மூத்த பிள்ளை ,தம்பி வேற இன்ஜினிரியங் படிக்கறான்,அப்பாவும் ரிட்டயர் ஆயிட்டாரு..அதனால அப்பா ஒரே பிடிவாதமா தம்பி படிச்சு முடிக்கட்டும் அப்புறம் பாக்கலாம்னு சொல்ல இவரு ரெண்டு நாளா சாப்பாடு தண்ணியில்லாம சத்தியாகிரகம் இருக்க,அதுக்குள்ள இவரோட தாய்மாமாவுக்கு விஷயத்தை சொல்ல ஒரு வழியா என்னை வந்து பாக்கறதுக்கு சம்மதம் வாங்கிட்டாரு.ஒரு நாள் எனக்கு போன் பண்ணி அவங்க வரப்போறதை சொன்னார்...ஐயோன்னு ஆயிடுச்சு..இப்ப என்ன பண்றதுன்னு ஒரு வழியா அக்காகிட்ட சொன்னேன் அப்படியே வீட்ல எல்லாருக்கும் தெரியவந்தது..யாரும் ஒண்ணும் சொல்லலை..அவங்க முதல்ல வந்து பாக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க.
அவரும் அம்மாவும் மட்டும் வீட்டுக்கு வர...எங்கவீட்ல எல்லாரும் என்னடா பையனோட அப்பா வரலையேன்னு கேக்க...அப்பா சொல்லி தான் அனுப்பியிருக்காராம்..அவரை அவரோட வீட்ல வந்து தான் பாக்கணும்னு சொல்ல..இது என்ன புது வம்புன்னு தான் நினைச்சோம்.வீட்ல எல்லாரும் திரும்ப திரும்ப ஒரே கேள்வியை தான் கேட்டாங்க..இந்த பையனை தான் கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கறயான்னு..நா அப்படியெல்லாம் இல்லனு சொல்ல,சரி எதுக்கும் அவங்க வீட்ல போயி பாக்கலாம்னு ஒரு நாள் சாயங்காலம் என்னை தவிர எல்லாரும் போனாங்க.திரும்ப வரும்போது யாரோட முகமும் சரியாயில்லை..என்கிட்ட எப்படி சொல்லறதுன்னும் தெரியலை..அக்கா தான் கடைசியிலே சொன்னா..அவங்க அப்பா ரொம்ப ரஃப்பா பேசினார்ன்னும் இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட அவருக்கு இஷ்டம் இல்லைன்னும், நானும் சரி இதை பத்தி இனி நாம எதும் பேசவேண்டான்னு சொல்லிட்டேன்.
அன்னைக்கு நைட்டு அக்காவும் நானும் மட்டும் பேசிட்டிருக்கும் போது அவ ஒரு விஷயம் சொன்னா..அன்னைக்கு சுபாஷ் கூட வந்தது அவரோட அம்மா இல்ல சித்தின்னு சொல்ல,அது எப்படி உனக்கு தெரியும்னு கேக்க..அன்னைக்கு வீட்டுக்கு போனபோது அவரோட அப்பா சொன்ன தகவல் அது.அவருக்கு 4 வயசிருக்கும்போதே அம்மா இறந்துட்டாங்களாம்..அதுக்கு பிறகு இவங்கள கல்யாணம் பண்ணிட்டார்...இவங்க மகன் தான் சின்னவர்.அதுதான் அப்பாவோட பயத்துக்கும் காரணம்..இவன் கல்யாணம் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே போயிட்டா ..என்ன பண்றதுன்னு.இதையெல்லாம் கேட்டுட்டு அப்பவே என் மனசு மாறிடுச்சு..அடுத்த நாள் காலையில வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்..அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு...
ஜாதகம் எதும் பாக்காம மேயில் நிச்சயம் பண்ணி எட்டு மாசம் கழிச்சு பல பிரச்சனைகளோட டிசம்பரில் எங்க கல்யாணம் நடந்துச்சு.இப்பவும் அவர்கிட்ட கேக்கற கேள்வி..அப்படி பிடிவாதம் பிடிச்சு என்னை கல்யாணம் பண்ணி என்னத்தை சாதிச்சீங்கன்னு கேட்டா..என்ன பண்றது அப்ப என் புத்தி மழுங்கிபோயிருந்தது..இப்ப தான் அந்த ஞானோதயம் எல்லாம் வருதுங்கறார்.இப்படியெல்லாம் சொன்னாலும் இது வரைக்கும் வேலன்டைன்ஸ் டே கிப்ட் குடுக்க மறந்ததில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
மகிழ்ச்சியாக ஆரம்பித்து நெகிழ்ச்சியாக முடித்துவிட்டீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தங்களுக்கும்,துணைவருக்கும்...
வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவணக்கம் துபாய் ராஜா அவர்களே!
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் முத்துலெட்சுமி!
ReplyDeleteரொம்ப தேங்ஸ்பா.
while grassing in tamilmanam, i checkd ur post...
ReplyDeletea feel good love story...
வணக்கம் கார்த்தி அவர்களே!
ReplyDeleteவரவுக்கு மிக்க நன்றி.
பதிவு மாதிரியே தெரியல சிந்து... ஒரு “மரோசரித்ரா” படம் பார்க்கற எஃபெக்ட் தான் இருந்தது... ஆனாலும், இது நல்ல ஹேப்பி எண்டிங் ஸ்டோரி... எண்டிங்னு சொல்லாம பல காலமாக தொடர்ந்து வரும் ஒரு இனிய காதல் கதைன்னு சொல்லலாம்...
ReplyDeleteபடிக்கறப்போ ரொம்ப சுவாரசியமா எழுதி இருந்தீங்க.. நிறைய நிகழ்ச்சிகளை மறக்காமலும் அதே சமயம் அந்த கோர்வையாக சொன்னதும் சூப்பர்...
எல்லாத்தையும் விட இதுதான் சூப்பர்...
//அப்படி பிடிவாதம் பிடிச்சு என்னை கல்யாணம் பண்ணி என்னத்தை சாதிச்சீங்கன்னு கேட்டா..என்ன பண்றது அப்ப என் புத்தி மழுங்கிபோயிருந்தது..இப்ப தான் அந்த ஞானோதயம் எல்லாம் வருதுங்கறார்.//
ஹா...ஹா...ஹா... யப்பா என்னா வில்லத்தனம்...
அதை தொடர்ந்து வந்த இரு வரிகளும் பலே சொல்ல வைத்தது... கூடவே அந்த அன்பு உள்ளங்களின் சிறிய ஊடலை வெளிப்படுத்தியது..
வாழ்த்துக்கள் சிந்து...