Friday, February 6, 2009

பத்தாவது ஆண்டு விழா

அது என்ன பத்தாவது ஆண்டுனு தானே நினைக்கறீங்க...வேற ஒண்ணும் இல்லைங்க எங்க பொண்ணு படிக்கற நடனபள்ளியோட ஆண்டு விழா.ஜனவரி 30ம் தேதி இங்க இருக்கிற ஒரு ஸ்கூலில் வெச்சு எல்லா வித கலைநிகழ்ச்சிகளோட பிரமாதமா நடத்தினாங்க.

சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.








2009 ஜனவரியின் முதல் வாரத்தில் டேன்ஸ் ஸ்கூலில் மீட்டிங் போட்டு கமிட்டி மெம்பர்சையெல்லாம் செலக்ட் பண்ணினாங்க..போனா போகுதுனு என்னையும் சேர்த்திகிட்டாங்க.அதுக்கப்புறம் இந்த வருஷம் அம்மாக்களுடைய டேன்ஸ்சை அறிமுகப்படுத்தனும்னு முடிவு பண்ணி எட்டு(நானும் கூட) பேரை தேர்ந்தெடுத்தாங்க.

எங்களோட ரிகர்சல் நல்லா நடந்ததோ இல்லையோ அரட்டையில் இருந்து குடும்பம் வரைக்கும் கச்சேரி நல்லா நடந்தது.ஒரு மாதமா தினமும் மூணு மணி நேரம் பிராக்டீஸ் இருந்தது.இதுக்கு மேல போன் வேற பண்ணி ஒரே டிஸ்கஷன் தான்.இந்த மாசம் வந்த போன் பில்லால் எட்டு வீட்டு ரங்குஸ்கள் மயக்கம் போடாத குறையா சுத்தறாங்க.

ஒரு மாசம் ஆட்டம் பாட்டுமா நேரம் போனதே தெரியலை.பதினைஞ்சு வருஷத்துக்கு பின்னாடி போன மாதிரி இருக்கு.புதிய நட்புக்கள் கிடைச்சிருக்கு. ரங்கமணிகளுக்கு ரொம்பவே பெரிய மனசுக தான் எங்களுக்காக ஒரு மாசமா அலைஞ்சதும் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததும் பங்கெடுக்கவச்சதும்.

9 comments:

  1. அம்மாக்களும் ஆடினீர்களா நடனம்? அருமைதான்! படத்திலே நீங்க எங்கிருக்கீங்க என்றும் சொல்லியிருக்கலாமே:)!

    ReplyDelete
  2. ஹி ஹி உங்களையெல்லாம் பயப்படுத்த வேண்டாம்னு தான் விட்டுட்டேன். ஆனா துளசி டீச்சர் கண்டுபிடிப்பாங்கனு நினைக்கறேன்.

    ReplyDelete
  3. என்னதான் சொல்லுங்க அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் இது போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வருவது,குழந்தைகளின் பள்ளி விழாக்களுக்காக அவர்களது பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டுக்கு உரியது.

    ReplyDelete
  4. பாராட்டுக்கு மிக்க நன்றி! இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் பொழுது தான் நம் நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஆர்வம் மிக அதிகமாகிறது.

    ReplyDelete
  5. போட்டோவுங்க அல்லாமே நெம்ப நல்லா இருக்குது. அதுலயும் கொளந்தைங்க ஆடுற அஞ்சாவது போட்டோ நெம்ப அளகா இருக்குதுங்கோவ்!

    ReplyDelete
  6. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கயல்விழி.

    ReplyDelete
  7. பெரியவங்க (எழுத்துலகில்) வரவுக்கு மிக்க நன்றி. அஞ்சாவது போட்டோவில் ரொம்ப சின்ன கொளந்தையும் இருக்குங்க..Just sweet 60.

    ReplyDelete