Monday, January 12, 2009

விசித்தர தாத்தா- பாகம் 6

தாத்தாவுக்கு சண்டை மட்டும் இல்ல அது கூட சங்கீதம்,ஜோஸியம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை, கவிதைனு தெரிஞ்சது ஏராளாமா இருந்தது.அப்பாவுக்கும் ஜோஸியத்தில் நம்பிக்கையும் ஓரளவு பார்க்கவும் தெரிஞ்சதால தாத்தாகூட சேர்ந்து அப்பப்ப வீட்டில் ஜாதகம் பார்ப்பாங்க.அதுல அப்பாவை பத்தி சொன்ன ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துச்சு.அதே மாதிரி தான் தாத்தாவை பத்தி அவரே பலன் சொன்னதும்.

தாத்தாவை பார்க்கறதுக்கு பேரன் கூட பேத்திகளும் இந்த தடவை வந்திருந்தாங்க.இந்த தடவை பேத்திகளை பார்த்து அதிசயமா கோபப்படலை. பேத்திக வீட்டை சுத்தம் பண்றதும் சமையல் பண்றதுமா ஒரே கலகலப்பா இருந்துச்சு தாத்தா வீடு.அப்படி சுத்தம் பண்ணும் போது(கூட நானும்) ஒரு சுருக்கு பை கிடைச்சுது,அதுக்குள்ள நிறைய நவரத்தின(ஸ்ரீலங்காவில் இருந்து கொண்டு வந்த) கல்லுக இருந்துச்சு.பேத்திக ஆன மட்டும் கெஞ்சி பார்த்தாங்க அந்த கல்லில் கொஞ்சம் தரச்சொல்லி ம்கூம் தாத்தாவாவது கொடுக்கறதாவது.போனா போகுதுனு ரெண்டு பேருக்கும் வெள்ளி கொலுசு மட்டும் வாங்கி கொடுத்தார்.அதுக்குபிறகு பேத்திக வரவேயில்லை.

ரொம்ப வருஷத்தக்கு பிறகு தாத்தா தன்னோட ரெண்டாவது மகனை பார்க்க மயிலாடுறைக்கு போறதாகவும் மகன்கூட ஒரு மாசம் இருந்துட்டு தான் வருவேன்னு சொல்லிட்டு போனார்.ஆனா போன பத்து நாளிலே முக வாட்டத்தோட திரும்ப வந்திட்டார். எங்க வீட்டுக்கு வந்து மகனும் மறுமகளும் சரியில்லேனும்,சரியா பார்த்துகிலைனும் பொலம்பிகிட்டு இருந்தார்.எங்க கூட தாத்தாவுக்கும் அப்படியே வாழ்க்கை கொஞ்ச நாள் ஓடுச்சு.அப்படி இருந்த ஒரு நாளில் தாத்தா சாப்பிட வந்தபோது சொன்னார் என்னோட டைம் முடியப்போகுது அதுனால நான் சின்னமகன்கிட்டேயே போறேனும்,அவன்தான் காரியம் எல்லாம் செய்யனும்னு சொன்னார்.

அப்பாவும் பெரியண்ணாவும் தான் தாத்தா ஊருக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணீனாங்க.ஒரு வேன் புடிச்சு எல்லா சாமான்களையும் தாத்தாவோட மேற்பார்வையில் ஏத்தி விட்டாங்க.பிறகு அப்பாவுக்கு தெரிஞ்சவுங்க சென்னை போறதா இருந்தது அவங்க கூட காரில் தாத்தாவையும் கண்ணீரோட வழியனுப்பினோம்.அவரும் பத்திரமா போய் ஊரு போய் சேர்ந்திட்டேனு லெட்டர் அனுப்பினார்.சரியா பதினைஞ்சு நாளிலேயே தாத்தா தூக்கத்திலேயே இறந்துட்டார்னு ரெண்டு மாசம் கழிச்சு நீயுஸ் வந்துச்சு,அப்ப போய் என்னாகப் போகுதுனு யாரும் போகலை.

அப்ப தோணாம இருந்தது இப்ப தோணுது..அப்பா,அம்மா வழி தாத்தாவை பார்த்ததே இல்லை அதுக்கு தான் கடவுள் அந்த தாத்தாவை அனுப்பி இருப்பாரோ???


(முற்றும்).

5 comments:

  1. //அப்ப தோணாம இருந்தது இப்ப தோணுது..அப்பா,அம்மா வழி தாத்தாவை பார்த்ததே இல்லை அதுக்கு தான் கடவுள் அந்த தாத்தாவை அனுப்பி இருப்பாரோ???/////

    :((

    நினைவுகளில் நிலைத்து நிற்கிறார் தாத்தா!

    ReplyDelete
  2. வணக்கம் ஆயில்யன்

    வருகைக்கு நன்றி! தாத்தா அடிக்கடி ஞாபகத்துக்கு வர்றார்.

    ReplyDelete
  3. கதையை இன்னும் படிக்கலை...
    பொரொபைலில் உள்ள படத்தை பார்த்ததும் அட்! பக்கத்திலே தான் இருக்கீங்க என்று ஓடி வந்தேன்.
    ஒரு டவுட்: எதுக்கு நீங்க உங்க வலைப்பக்கத்தையே follow பண்ணுகிறீர்கள்? :-)

    ReplyDelete
  4. வணக்கம் வடுவூர் குமார்

    உண்மையை சொல்லணும்னா ஒரு ஆர்வத்திலே வலைபதிவை தொடங்கிட்டேனே தவிர நிறைய குழப்பங்கள் இருக்கு.followவை மாத்திடுறேன்.

    ReplyDelete
  5. மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களில் ஒரு வித வசீகரம் இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete