Tuesday, February 17, 2009

Chain Mails to All

கடந்த கொஞ்ச நாளா இந்த மாதிரி வர்ற மின்னஞ்சல் பார்த்தாலே பயமா இருக்கு...இது அனேகமா எல்லாருக்கும் இருக்கும்னு நினைக்கிறேன்.

அதுவும் இந்த மாதிரி உலகமே பணவீழ்ச்சியால் நொடிச்சு, யாருக்கு எப்ப(வேலை)சீட்டு கிழியப்போகுதோனு கலக்கத்தில் இருக்கும் போது இந்த மாதிரி மின்னஞ்சல் வேற வந்து பயமுறுத்துது.அதுகூட 7லிருந்து 21பேர் வரைக்கும் அதை பார்ஃவேடு பண்ணனும்னு கண்டிஷன் வேற.இதை அனுப்பறதே நெருங்கிய வட்டங்கள் தான்.

இதை யாருப்பா கண்டுபிடிச்சது? இதை அனுப்பலைனா வேலை போயிரும்,குடும்பமே கஷ்டப்படும் அப்புறம் குடும்பத்தையே இழந்துருவீங்கனு சொல்லி வருது சாராம்சம். கடவுள் கூட மாடர்ன் டெக்னாலஜிக்கு மாறி அவரை நினைக்க வைக்க கேன்வாஷ் பண்றாரா?


கடவுளை எல்லாத்துக்கும் மேலான சக்தியாகவும்,பிரபஞ்சமே அவரோட இயக்கத்தில் இருக்கிறதாகவும்,தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு நம்புகிற நாம்,வீட்டில் செய்யற பூஜையில் இருந்து பெரிய அளவு வேண்டுதல் வரைக்கும் அவர் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்து தீயதில் இருந்து காப்பாத்துவாருனு தானே செய்யறோம்.அப்படி இருக்கும் போது இந்த மாதிரி வர்ற மெயிலை அடுத்தவங்களுக்கு அனுப்பலைனு தண்டிப்பாரா?

இந்த மாதிரி மெயில்களை பார்க்கும் பொழுது, எனக்கு ஒரு கண் போனா உனக்கு ரெண்டு கண் போகட்டும்கிற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது.இப்ப இருக்கிற நிலைமையில்,நாளைய பொழுது வேலை இருக்குமா இருக்காதா குடும்பத்தை எப்படி கரைசேர்க்கறதுனு ஆயிரம் கவலைகளோடு இருக்கும் போது இந்த மாதிரி மெயிலை அனுப்பி தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீங்க?

இப்ப தேவை பயமுறுத்தல்கள் அல்ல. தன்னம்பிக்கை தரக்கூடிய உரைகள்,நட்பு கொடுக்கும் தைரியம், அரவணைக்கும் பண்பு, நான் என்றது போய் நாம் என்கிற ஒருங்கிணைப்பு இதெல்லாம் இருந்தாலே கடவுள் உன்னருகில் இருக்கிறார் என்று பொருள்.


தயவுசெய்து இந்த மாதிரி மெயில்களை பார்த்தாலே அழிச்சுடுங்க இல்லைனா சுற்றமும் நட்பும் அவங்க மனசில் இருந்து உங்களை அழிச்சுடுவாங்க.

13 comments:

  1. உண்மைதான்.இது போன்ற அஞ்சல்களில் படங்கள் பார்க்க ரசிக்க என்றிருந்தால் மட்டுமே அனுப்புவேன் மற்றவை அப்படியே குப்பைக்கூடைதான்.இது போல் அஞ்சல்கள் அனுப்பாததால் இறைவன் நம்மைத் தண்டிப்பான் என்றால் பஞ்சமா பாதகங்கள் பண்ணுபவரைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா?

    ReplyDelete
  2. வணக்கம் goma அவர்களே!

    நானும் அதே போல் தேவையில்லாதது என்றால் கண்டவுடன் அழித்துவிடுவேன்.

    வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. வணக்கங்க, துபாய்லயா இருக்கீங்க? இங்க வளைகுடா நாடுகளில் துபாய்தான் ரொம்ப பொருளாதார வீழ்ச்சி அடைஞ்சி இருக்கு பிசினஸ் சிட்டிங்கறதால. பட் ஒண்ணும் கவலை படாதீங்க. எல்லாம் தற்காலிகம்தான். சரி ஆய்டும். செயின் மெயில் எல்லாம் படிக்கவே வேணாம். ஜஸ்ட் டெலிட் தான். பார்த்தாலே தெரியுமேங்க. அத ஏன் படிச்சிகிட்டு அத பத்தி திங்க் பண்ணிக்கிட்டு.

    ReplyDelete
  4. வரவுக்கும் ஆறுதலுக்கும் நன்றி விஜய்.அப்படியே உங்க பிளாக் அட்றஸை அனுப்புங்க.

    ReplyDelete
  5. இந்த மாதிரி மெயிலை பார்த்தவுடனேயே டெலிட் பண்ணிடுவென். இந்த மாதிரி ஒரு மெயில் விஷயத்திலயும், எஸ்.எம்.எஸ் விஷயத்திலயும் எனக்கும் என் ப்ஃரண்டுக்கும் கொஞ்சம் வருத்தம் கூட ஆகிடுச்சு.

    இதப்படிக்கிறவங்களாவது இனிமே இது மாதிரி வரும் மெயில்களை ஃபார்வேர்ட் செய்யாமல் இருக்கட்டும்.

    ReplyDelete
  6. :) டெலிட் அவ்வளவு தான்.. யோசிக்கவே யோசிக்காதீங்க..

    ReplyDelete
  7. சிந்து விஜய் பேரை க்ளிக் செய்தா போகுதே அவர் ப்ரபைலுக்கு பாருங்க.. வரும் ஆனா வராதாம். அங்க எதும் பதிவு வருமா தெரியல :)))

    ReplyDelete
  8. வரவுக்கு நன்றி அமித்து அம்மா! எனக்கும் கூட அந்த மாதிரி ஆகிடுச்சு.இப்ப சுதாரிச்சுட்டேன்.

    ReplyDelete
  9. வரவுக்கு நன்றி இயற்கை அவர்களே!

    ReplyDelete
  10. வரவுக்கு நன்றி கயல்விழி! விஜய் வடிவேலு ரசிகரா?

    இப்பவெல்லாம் மெயிலை பார்த்தாவே டெலிட்தான்

    ReplyDelete
  11. சாரிங்க. நான் ஃபாலோ அப், வைக்க மறந்துட்டேன். அதான் லேட் ரிப்ளை. முத்து மேடம் சொன்னா மாதிரி, என் பதிவு, இன்னும் வரும்…ம்ம்ம்….ஆஆனா வராது ரேஞ்சில தான் இருக்கு. தெரிஞ்சிதான் வச்சேன் பேரு. இன்னும் பின்னூட்ட பெருங்கோவா தான் இருக்கேன். :)) ஆரம்பிச்சிட்டா ஒழுங்கா எழுதணுமேங்க… உங்க அளவுக்கு எல்லாம் சரக்கு இல்லியே.நாங்க என்ன வச்சிகிட்டா வஞ்சனை பண்ணறோம். சட்டில இருந்தாதானங்க ஆப்பைல வரும்.. என் மெயில் ஐடி viji022@gmail.com. if you dont mind can i get your mail id pls. சே, சே, அந்த மாதிரி சங்கிலி மெயில் எல்லாம் அனுப்ப இல்லீங்க.:)) துபாய் பத்தி கொஞ்சம் கேக்கனும். அதான்.

    ReplyDelete
  12. (((உங்க அளவுக்கு எல்லாம் சரக்கு இல்லியே.நாங்க என்ன வச்சிகிட்டா வஞ்சனை பண்ணறோம். சட்டில இருந்தாதானங்க ஆப்பைல வரும்..))))

    நானும் அப்படி தான் நினைச்சிடிருக்கேன்...ஏதோ பெரியவங்க எல்லாம் நம்ம பதிவு பக்கம் வரதால பொழப்பு ஓடிட்டிருக்கு.

    ReplyDelete