எனக்கு தெரிந்து ஒரே ஒரு தடவை தான் மகளிர் தினத்தை கொண்டாடினேன்.அது பெங்களூரில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியின் ஒரு யூனிட்டில் வேலை செய்தபொழுது.
நமக்கு வேலையே ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ணறது தான்..அதுவும் காலையில் மட்டும் தான் வேலை இருக்கும் அதுக்கப்புறம் போன் பண்றது,வர்ற போனுக்கு பதில சொல்லறது,அப்படியே ஹெச்.ஆரில் கொஞ்சம் வேலை அதுகூட இன்டஸ்டிரியல் இஞ்ஜினியரும்,பினிஸ்சிங் யூனிட் க்யூ.சி (பொண்ணுக)கூட மிச்ச பொழுது ஓட்டறதுனு இருந்த போது தான் ஒரு நா சோஷியல் வெல்பேரில் இருந்து கொஞ்ச பேரு வந்து மீட்டிங் போட்டாங்க.
புதுசு புதுசா நிறைய திட்டங்களை சொன்னாங்க.அதுல ஒண்ணு தான் மகளிர் தின கொண்டாட்டம்.செலவு எல்லாம் யூனிட்டே செய்யனும்னு சொல்லிட்டாங்க.நாங்க தான் முப்பெரும் தேவியர் இருக்கோமே,பொறுபெல்லாம் எங்ககிட்ட.அப்புறம் கேக்கவாவேணும்? முதல் வேலையா பண வசூலை ஆரம்பிச்சோம் அதுல சிக்கல் என்னன்னா ஆம்பிளைக யாரும் பண உதவி செய்ய தயாரா இல்லை..எல்லார்கிட்டேயும் ஒரே பதில்....மகளிர் கொண்டாட்டத்துக்கு நாங்க எதுக்கு கொடுக்கணும்னு.ஆனாலும் விடாமுயற்சி பண்ணி ஓரளவு வசூல் பண்ணிட்டோம்.
நம்மளை நம்பி கொடுத்த பொறுப்பை நல்லா செய்யணுமேனு டென்சன் வேற.என்ன பண்றதுனு யோசிச்சு மியூசிக்கல் சேர்,பானை உடைக்கறது,கயிறு இழுக்கறது மற்றும் ஓட்டபந்தயம் வெக்கலாமனு முடிவு பண்ணினோம்.ஆனா பங்கெடுக்க லேடீஸை கொண்டுவர ஒவ்வொரு தடவையும் இன்சார்ஜூக கிட்ட அனுமதி வாங்கணும்,அதுக்கு அவங்க பண்ணின பிகு கொஞ்ச நஞ்சமல்ல.போட்டிகளில் ஜெயிக்கறவங்களுக்கு பரிசு வேற கொடுக்கணும்.
மகளிர் தினத்தன்னைக்கு காலையில எல்லா பெண்களுக்கும் பூ கொடுக்கணும்,யூனிட் பூராவும் கலர் பேப்பர் ஒட்டி,வெல்கம் ஃபோர்டு ஒண்ணையும் வெக்கணும் அதுகூட ஸ்வீட் எல்லாருக்கும் கொடுக்கணும், தலைமை தாங்க வரவுங்களுக்கு பூகொத்து வாங்கணும்னு முடிவு பண்ணினோம்.ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸான மாதிரி இருந்துச்சு.வேற என்ன டேன்ஸ் தான்.
பாட்டை முடிவு பண்ணி பிராக்டீஸிம் ஆரம்பிச்சாச்சு. ஒரு சோலோவும், எட்டு பேரோட ஒரு க்ரூப்பும் செலக்ட் பண்ணினோம்.அப்பவும் இன்சார்ஜீக டார்கெட் டார்கெட்டுனு பொலம்பிகிட்டே இருந்தாங்க.எப்படியோ விழா முடிஞ்சா போதும்னு ஆயிருச்சு.மகளிர் தினமும் வந்தச்சு, சாயங்காலமா விழாவுக்கு முக்கிய விருந்தாளியா கம்பெனியோட முதலாளி அம்மா(இத்தாலியர்)வந்திருந்தாங்க.மகளிர் தினத்தை பத்தி கன்னடாவில் கொஞ்சம் பேசீனாங்க.
நடனம் பாட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு பரிசளிப்பு நடந்தது.அதுக்கப்புறம் எல்லாருக்கும் இனிப்பை வழங்கினோம்.பிறகு ஒரு நாள் ஜி.எம். ஹெச்.ஆர் வந்து எங்களையெல்லாம் ரொம்பவே பாராட்டினார்.எல்லா யூனிட்டை விட எங்க யூனிட்டில் தான் நிகழ்ச்சியெல்லாம் சிறப்பா இருந்ததும்னு சொன்னார்.எங்க மேனேஜருக்கு ஒரே பெருமை...பின்ன இருக்காதா இந்த நிகழ்ச்சிக்கு ஒத்த பைசா கூட குடுக்காம, வாங்கி வெச்ச இனிப்பில் ஒரு கிலோ எடுத்துட்டு போனதுமில்லாம முதலாளிகிட்டே நல்ல பேர் கிடைச்சதும்.
மகளிர் தின வாழ்த்துக்கள்.
//முதல் வேலையா பண வசூலை ஆரம்பிச்சோம் அதுல சிக்கல் என்னன்னா ஆம்பிளைக யாரும் பண உதவி செய்ய தயாரா இல்லை..எல்லார்கிட்டேயும் ஒரே பதில்....மகளிர் கொண்டாட்டத்துக்கு நாங்க எதுக்கு கொடுக்கணும்னு.//
ReplyDeleteஅடடா.. !!..
//எங்க மேனேஜருக்கு ஒரே பெருமை...பின்ன இருக்காதா இந்த நிகழ்ச்சிக்கு ஒத்த பைசா கூட குடுக்காம, வாங்கி வெச்ச இனிப்பில் ஒரு கிலோ எடுத்துட்டு போனதுமில்லாம முதலாளிகிட்டே நல்ல பேர் கிடைச்சதும்.//
அய்யோ பாவம் .. !!
எனிவே..
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
நல்லா என்ஜாய் பண்ணுங்க...
மகளிர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநினைவுகளை அழகாய் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteமகளிர் தின வாழ்த்துக்கள் சிந்து!
:)
ReplyDeleteவரவுக்கு நன்றி ரங்கன் அவர்களே! இந்த நிகழ்ச்சி நடந்தது 2001ல்.
ReplyDeleteநன்றி இயற்கை அவர்களே.
ReplyDeleteநன்றி ராமலக்ஷிமி மேடம்.
ReplyDeleteசிரிப்பை மட்டும் பதிலா கொடுத்ததன் மர்மம் என்னனு கூட சொல்லுங்க கயல்விழி.
ReplyDeleteஅதன் பிறகு நீங்க ஏன் மகளிர்தினம் கொண்டாட வில்லை..?என்ற ரகசியத்தை சொல்லாமல் விட்டுட்டீங்களே...?
ReplyDeleteலேசான நகைச்சுவையோடு இயல்பாய் எழுதியிருக்கீங்க. ஒங்க தலைமைப் பண்பும் வெளிப்படுது. முயற்சி எடுத்து எழுதினால் மிகச் சிறந்த படைப்பாளியாய் வரப் பிரகாசமான வாய்ப்பிருக்கு. வாத்துக்கள்
ReplyDeleteவணக்கம் கீழை ராஸா !
ReplyDelete(((அதன் பிறகு நீங்க ஏன் மகளிர்தினம் கொண்டாட வில்லை..?என்ற ரகசியத்தை சொல்லாமல் விட்டுட்டீங்களே...?)))
இதுக்கு பிறகு அம்மாக்கள் தினம் கொண்டாட வேண்டியிருந்ததால மகளிர் தினத்தை விட்டுட்டேன்
வணக்கம் லதானந்த் !
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.