Tuesday, January 5, 2010
ஆழப்புழா - ஒரு பயணம் 4
மஞ்சள் நீரோடும்,அரிசி பொடி,பூக்களோடு பூஜையை ஆரம்பிச்சார்.கிட்டதட்ட ஒரு மணி நேரம் மஞ்சளை தெளிக்க,அரிசி பொடி தூவ,பூவாலயும் பாலாலயும்,இள நீராலையும் அபிஷேகம், கற்பூர ஆரத்தினு கடைசியா இந்த குடும்பத்தை அத்தனை பேர்களையும் சொல்லி அர்ச்சனையும் பண்ணிட்டு பிரசாதம் கொடுக்க எல்லாரும் நூறும் அம்பதுமா ஒரு இலையில பணத்தை வெச்சாங்க.அங்க தான் அர்ச்சகர் கையால எதுவும் தொடமாட்டாரு அதனால அன்பளிப்பை கீழே தான் வெக்கனுமாம்.
வந்த எல்லாருக்கும் இரண்டு வகை பாயாசங்களையும் கொடுத்து அனுப்பினாங்க.நாங்களும் வாங்கிட்டு அங்க இருந்தவங்ககிட்ட சொல்லிட்டு காரில் ஏறினா மறுபடியும் சாரல் மழை.வர்ற வழியில் ஏகப்பட்ட ஹவுஸ் போட் நின்னுட்டிருந்தது..அங்கிருந்தும் பேக்வாட்டர்(Back water) போட்டிங் தொடங்குமாம்.அதுக்கு பக்கத்திலேயே ஒரு நல்ல ஹோட்டல் விதவிதமான வாசனைக வந்துச்சு...ஆனா அண்ணா தான் அங்க எதயும் வாங்க ஒத்துக்கலை.அப்படியே வந்திட்டிருக்கும்போது ரெண்டு மூணு பேர் மீன் விக்க நா வாங்கியே ஆகணும்னு நிக்க...
கரிமீன்(கேரளாவில் ரொம்ப பிரபலமான ஏரி மீன்) விலை கேட்டா 9 மீனுக்கு 600 ரூபாயாம்..பேரம் பேசி பேசி 450 ரூபாய்க்கு வாங்கினோம்.சுத்தம் செய்யலாம்னு அக்கா மீனை எடுத்தா சுத்தி ஒரே தேனீ கூட்டம் ..எங்களையெல்லாம் திட்டிட்டே மீனை வெட்டி,நல்லா பொறிச்சும் தந்தா.நல்லா நாங்களும் வெட்டினோம்,இதே மாதிரி ரெண்டு தடவை அக்காகிட்ட திட்டு வாங்கிட்டே மீன் சாப்பிட்டோம்.
அடுத்த ரெண்டு நாளில் மறுபடியும் கோவில் விசிட்...சக்குளத்துகாவு அம்மன்,மன்னார் சாலா நாகர் கோவில், ஹரிப்பாடு முருகன், மாவேலிக்கரா கிருஷ்ணன் கோவில்ன்னு எல்லா தெய்வத்துக்கும் வேண்டுதலையெல்லாம் சொல்லிட்டு வந்தேன்.சொந்த பந்தங்களையும்,பார்க்கவேண்டியவங்களையும் பார்த்து பேசிட்டு அடுத்த நாள் ஊருக்கு மூட்டையை கட்டினோம்.
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் சுற்றும் முயற்சியில் உங்கள் இந்த ட்ரிப் ஆலப்புழாவா??
ReplyDeleteபேஷ்... பேஷ்....
பயணம் பற்றிய வர்ணனை பலே....
வாழ்த்துக்கள் சிந்து......
கறி மீன் எபடி இருந்துச்சு? ரண்டு துண்டு அனுப்ச்சிருக்கலாமல?
ReplyDeleteவணக்கம் கோபி அவர்களே!
ReplyDeleteஉலகம் சுத்தனும்னு ரொம்ப ஆசையெல்லாம் இருக்கு ஆனா ரங்ஸ் ரிட்டயர் ஆனதுகப்புறம் தான் அனுப்புவாராம்.
வணக்கம் லதானந்த் அவர்களே!
ReplyDeleteஅடுத்த தடவை மீன் பொறிச்சா உங்களுக்கு பார்சல் உண்டு.