Tuesday, January 19, 2010
யோகா
யோகாவை பத்தி சொல்லி கேள்விபட்டிருக்கேனே தவிர அதை பத்தி வேற எதுவும் தெரியாம தான் இருந்தது.போகணும்னு ரொம்ப வருஷ கனவா இருந்ததே ஒழிய நிகழ்வுக்கு வர இத்தன வருஷமாயிடுச்சு.பொண்ணு பரதநாட்டியம் படிக்கற இன்ஸ்டியூட்டில் யோகா க்ளாஸ் எடுக்கறதாகவும் வர்றீங்களானு என்னை கேக்க நா அவரை கேக்க..ஓக்கே டன்னு அவரும் சொல்ல உடனடியா(ஆகஸ்ட் 09) ரூ500 அட்மிஷனுக்கு ரூ400 மாச பீஸ்னு சேர்ந்தாச்சு.
க்ளாஸ்க்கு போறவரைக்கும் ஒரே கலக்கமா இருந்துச்சு..டீச்சர் எப்படி இருப்பாங்களோ,யோகாவுக்கு வர்றவங்க என்னை ”மாதிரியே” வெயிட் குறைஞ்சவங்களோன்னு எல்லாம் சிந்தனையா இருந்துச்சு.போன பிறகு பாத்தாக்க டீச்சரே ரொம்ப ”ஸ்லிம்மா” இருந்தாங்க...ஆறு ஸ்டூடன்சும் நம்ம ரேஞ்சிலேயே இருந்ததால வயித்துல பால் வார்த்த பீலீங்.
ஒரு ஜெனரல் இன்ட்ரொடக்ஷன் எல்லார்கிட்டயும் ஆனா ஒரு ஆள் கூட நம்மளை பாத்து சிரிக்கலை...அடடா முத நாளே இப்படி இருக்கே இவங்க கூட சேர்ந்து எப்படி யோகா பண்ணி காலந்தள்ளறதுனு மறுபடியும் சிந்தனை.அன்னைக்கு க்ளாஸ் அப்படி முடிஞ்சது.ரங்ஸ்க்கு போன் போட்டு இப்படியெல்லாம் க்ளாஸில் இருக்கு எனக்கு போறதுக்கே பேஜாரா இருக்குன்னு சொல்ல அவரு கேட்டாரு ஒரு கேள்வி..நீ யோகா பழக போறயா இல்ல ப்ரண்ட்ஸ் கூட பழகபோறீயானு..கூடவே போனஸ்சா அரைமணி நேரம் அட்வைஸ் வேற.அப்பவே முடிவு பண்ணிட்டேன்..இனிமே இதைபத்தி இவர்கிட்ட பேசக்கூடாதுன்னு.
ரெண்டாவது நாள் ஒரே ஒருத்தங்க மட்டும் கொஞ்சம் புன்சிரிப்பை காட்டினாங்க.டீச்சர் அன்னைக்கு யோகா மேட் வாங்கறதை பத்தியும்,டிராக் சூட் போட்டுட்டு தான் வர்றனுங்கறதையும் பத்தி சொல்ல..நா எதார்த்தமா இந்த மேட் எங்க கிடைக்கனும்னு கேக்க உடனே டீச்சர் என்கிட்டயே இருக்கு...ஜஸ்ட் 600னு சொல்ல கொஞ்சம் உஷாரா நா வீட்ல கேட்டுட்டு சொல்றேனு எஸ்கேப்.அப்புறம் தான் தெரிஞ்சுது ரூ 300 லிருந்தே கிடைக்கும்னு.நானும் அந்த மாதிரி ஒரு மேட்டை வாங்கிட்டு போனேன்.
அதை பாத்தவுடனே டீச்சர் எங்க வாங்கனீங்க..எவ்வளவு குடுத்தீங்கன்னு கேக்க நா சொல்ல..எல்லாம் கேட்டுட்டு கடைசியில சொன்னாங்க..நீங்க வாங்கினது மோசமான குவாலிட்டி நா விக்கறது பர்ஸ்ட் குவாலிட்டுன்னு.அதை பத்தி அப்புறம் எதும் பேசலை. க்ளாஸ் முடிஞ்சது.டீச்சர் போனதுகப்புறம் ரெண்டு ஸ்டூடன்ஸ் என்கிட்ட வந்து எங்க உங்க மேட்டை காமிங்க கேக்க..அவங்க பாத்துட்டு இதும் நல்ல குவாலிட்டி தான்..நாங்க கூட வெளில தான் வாங்கினோம்..அதனால தான் டீச்சருக்கு கோவம்னு சொன்னாங்க.
இதுக்குள்ள எல்லாரையும் பாத்து சிரிக்கறளவு பழக்கம் பண்ணிட்டேன்.க்ளாசுக்கு போனா முத வேலை 20 ரவுண்டு ஜாகிங் பண்ணனும்..இதை பண்ணி முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்..இந்த டீச்சர் சொல்லிக்குடுக்கறது பதன்ஞ்சலி யோகான்னு சொன்னாங்க.விதவிதமான எக்சர்ஸைசா பண்ணவெச்சாங்க.என்ன போஸ்டர்ஸ்னு ஒரே குழப்பா இருந்துச்சு.இருந்தாலும் வெயிட் ரிடக்ஷன் பண்ணனுமேன்னு எல்லாத்தையும் மாங்கு மாங்குன்னு செஞ்சோம்.கூடவே ஒருத்தங்க எனக்கு நல்ல பிரண்டும் ஆயிட்டாங்க.
டீச்சர் தினம் தினம் கொஞ்சம் லெக்சர் குடுப்பாங்க அதை நம்பறதா வேண்டாமா...ஸ்டூடன்சுக்குள்ளே(நாங்க தான்)பட்டிமன்றமே நடந்தது ஏன்னா இன்னைக்கு எதை பத்தி சொன்னாங்களோ அது அடுத்த நாள் அவங்களே அப்படி இல்லைன்னு சொல்வாங்க.ஒரு நாள் க்ளாஸில் ஹனி லெமன் வாட்டர் தெரபி உங்களுக்கு தரப்போறேனு சொன்னாங்க ..அது என்னன்னா ஒரு வாரம் அதை மட்டும் தான் குடிக்கனும்மாம்..வேற எந்த உணவுப்பொருளையும் தொடக்கூடாதாம்...அடுத்த நாளே ரெண்டு பேர் யோகாவுக்கு வரமாட்டேனு சொல்லிட்டாங்களாம்.
டீச்சரும் அடிக்கடி லீவு போட...இன்ஸ்டியூட்டிலிருந்தே அவங்களுக்கு டாட்டா சொல்லிட்டாங்க.இப்ப வேற டீச்சர் வந்திட்டாங்க..அது இன்னொரு நாள்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆஹா.... இவ்வளவு யோகம் எல்லாம் நமக்கு வாய்க்கலையேப்பா!!!
ReplyDeleteம் அப்புறம்?????
வணக்கம் டீச்சர்!
ReplyDeleteநாம தான் மொத்த யோகத்தையும் குத்தகை எடுத்திருக்கோமே..அதனால அப்பப்ப கிடைக்குது டீச்சர்.
டூர் எல்லாம் முடிச்சு வந்தாச்சா நீங்க.
//யோகாவுக்கு வர்றவங்க என்னை ”மாதிரியே” வெயிட் குறைஞ்சவங்களோன்னு //
ReplyDeleteஆஹா... தொடங்கியாச்சா..... இந்த ஊரு இன்னமும் உங்கள நம்பிட்டு இருக்கு... ம்ம்ம்ம்.... நம்பிக்கை தானே வாழ்க்கை....
//எனக்கு போறதுக்கே பேஜாரா இருக்குன்னு சொல்ல அவரு கேட்டாரு ஒரு கேள்வி..நீ யோகா பழக போறயா இல்ல ப்ரண்ட்ஸ் கூட பழகபோறீயானு..கூடவே போனஸ்சா அரைமணி நேரம் அட்வைஸ் வேற.//
சொன்னீர்களா.... சொன்னேன்...... கிடைத்ததா??...... நிறைய கிடைத்தது..... இனிமேல் வாயை...... சாப்பிட கூட திறக்க மாட்டேனே.....
//ஜஸ்ட் 600னு சொல்ல கொஞ்சம் உஷாரா நா வீட்ல கேட்டுட்டு சொல்றேனு எஸ்கேப்.அப்புறம் தான் தெரிஞ்சுது ரூ 300 லிருந்தே கிடைக்கும்னு.//
ஒரு வேளை ஒல்லியா இருக்கறதால, ரெண்டு செட் ட்ரஸ் குடுக்க நெனச்சு இருப்பாய்ங்க.... ஹீ....ஹீ.....
//ஒரு வாரம் அதை மட்டும் தான் குடிக்கனும்மாம்..வேற எந்த உணவுப்பொருளையும் தொடக்கூடாதாம்...அடுத்த நாளே ரெண்டு பேர் யோகாவுக்கு வரமாட்டேனு சொல்லிட்டாங்களாம்.//
அதானே... குறைந்த பட்சம் மூச்சாவது விட வேண்டாமா என்ன??
சிந்து...... ஊர் உலகம் சுற்றாத போது, சிறிது நேரம் “யோகா”வும் செய்யப்படுமா???
:)
ReplyDeleteவாழ்த்துகள்
வணக்கம் R.Gopi!
ReplyDeleteஊர் உலகம் எப்பாவாச்சும்...உதாரணமா மாசத்துக்கு ஒரு தடவை..மிச்ச நேரத்தில் தினமும் ரெண்டே மணி நேரந்தான் யோகா.
”ஆஹா... தொடங்கியாச்சா..... இந்த ஊரு இன்னமும் உங்கள நம்பிட்டு இருக்கு... ம்ம்ம்ம்.... நம்பிக்கை தானே வாழ்க்கை....”
அந்த குரூப்பிலே வெயிட் கம்மி பண்ணினதில் முதலிடம் எனக்கு தான்.
வரவுக்கு மிக்க நன்றி.
வணக்கம் நேசமித்ரன் அவர்களே!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி.
முக்கியமான மேட்டர் விட்டுட்டீங்களே சிந்து..
ReplyDeleteகத்துக்கொடுத்த டீச்சர் வெயிட் கம்மி செஞ்சாங்களா :-)))).
வணக்கம் அமைதிச்சாரல்!
ReplyDeleteஅதை செஞ்சிருந்தா தான் டீச்சர் இனியும் அங்க
இருந்திருப்பாங்களே...பில்டப்போட சரி....
:))
ReplyDeleteஅப்பவே முடிவு பண்ணிட்டேன்..இனிமே இதைபத்தி இவர்கிட்ட பேசக்கூடாதுன்னு.//
:)))))