டிசம்பர் 2ம் தேதி என் பொண்ணு ஒரு இன்விடேஷனோட ஸ்கூலிருந்து வந்தா..அதை என் கையில குடுத்துட்டு 5ம் தேதி ஸ்போர்ட்ஸ் டே அதுக்கு நீயும்,அத்தையும் வரணும்னு சொன்னா.அப்போ நா கேட்டேன்..உனக்கு ஏதாவது பிரைஸ் இருக்கான்னு..அதுக்கு அவ எனக்கு இன்னும் போட்டிக முடியலை..செலக்ட் ஆனா வந்து சொல்லறேன்னும் சொன்னா.சரின்னு விட்டாச்சு. 5ம் தேதி காலையில அவளும் அண்ணா பொண்ணும் ஸ்கூலுக்கு ரெடியாகும் போது நா...நீங்க ரெண்டு பேரும் பிரைஸ் வாங்கணும்,வாங்கினா நா ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் குடுப்பேன்னு சொன்னேன்.சரி சரின்னு தலையாட்டிகிட்டே ரெண்டு பேரும் நாங்க கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டு ஸ்கூல் பஸ்ல போயிட்டாங்க.
பத்தரைக்கு விழா தொடக்கம் அதனால நானும் அண்ணியும் பத்து மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு போயிட்டோம்.பேரண்டஸ் உட்காரதுக்காக ஒதுக்கமா ஒரு சைடில் பந்தல் போட்டு வச்சிருந்தாங்க..நாங்களும் விழா மேடை நல்லா தெரியற மாதிரி ஒரு இடத்தில் உட்கார்ந்துட்டு விழா தொடங்கற வரைக்கும் எங்க ஸ்கூல் மலரும் நினைவுகளை பகிர்ந்துகிட்டிருந்தோம்..அப்ப ஸ்கூல் என்ட்ரன்ஸில் ஒரே பரபரப்பு..விழாவை தலைமை தாங்க ஏர்போர்ஸில் கேடட் கேட்டகிரியில் உள்ளவரை தான் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.அவரை வரவேற்க தான் அந்த பரபரப்பு.
அவர் கூட அவர் திருமதியும்,ஸ்கூல் பிரின்சிப்பாலும்,ஸ்கூல் பீப்பிள் லீடர்களும் சேர்ந்து மேடைக்கு அருகில் வர எல்லா பேரன்ட்ஸிம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றோம்.அவங்க எல்லாரும் மேடையில் உட்கார..வரவேற்புரை தர என் பொண்ணோட க்ளாஸ் டீச்சர் வந்தாங்க.கூடவே ரெண்டு பொண்ணுக பூங்கொத்தோட மேடைக்கு வந்தாங்க..திடீர்னு அண்ணி போட்டோ எடு எடுன்னு சொல்ல..எனக்கு எதுக்குன்னே தெரியலை...மேடையை பார்த்தா என்னோட பொண்ணு தான் பூங்கொத்தை சீப் கெஸ்டுக்கு குடுக்கறதுக்காக மேடைக்கு வந்திருக்கா..இதை புரிஞ்சு போட்டோ எடுக்கறதுகுள்ள கீழே எறங்கிட்டா.
அதுக்கப்புறம் நான்கு அணிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சீப்கெஸ்ட்டுக்கு சல்யூட் செய்தார்கள்.பிறகு நாலைந்து விதமான நடனங்களும்,பிரமிட்டுகளையும் செய்து காட்டினார்கள்.தொடர்ந்து சீப் கெஸ்டின் சிறப்புரை அது முடிந்தவுடன் பரிசளிப்பு விழா ஆரம்பித்தது.முதலில் நர்ஸரி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்க,அடுத்தது பிரைமரிக்கு..முதலில் பர்ஸ்ட் ஸ்டேன்டர்டுக்கு, ஓட்ட பந்தயத்தில் ஜெயித்த மூணு பேரை மைக்கில் அறிவிப்பு செய்ய ஒரு நிமிஷம் நம்ப முடியலை..ஏன்னா ரெண்டாவது பரிசு சில்வர் மெடல் என்னோட பொண்ணுக்கு.
எனக்கு சந்தோஷத்தை விட அதிர்ச்சி தான் அதிகமா இருந்தது..காலைல கேட்டபோது கூட ஒண்ணும் சொல்லாம இருந்தா..இப்ப இப்படி ஒரு சர்ப்ரைஸ் தந்துட்டாளேனு..அதை பத்தி கேக்கலாம்னு பாத்தா மெடலையும் சர்ட்டிபிகேட்டையும் வாங்கிட்டு அவ க்ளாஸ் டீச்சர்கிட்ட ஓடிட்டா.பின்னாடியே நானும் அண்ணியும் போனோம்..அதுக்குள்ள சர்ட்டிபிகேட்டை டீச்சர் வாங்கிட்டாங்க..ரெண்டு நாள் கழிச்சு குடுத்தனுப்பறோம்னு சொன்னாங்க.சரின்னு இவளை கூட்டிட்டு வெளியே வந்தோம்.அப்போ அவ கிட்ட கேட்டேன்..ஏண்டா காலைல என்கிட்ட சொல்லலைனு கேக்க ..என்னை ஒரு பார்வை பாத்துட்டு சொன்னா..நீங்க மட்டும் என்னோட பர்த்டேக்கு பப்பா வர்றதை...யாரோ கெஸ்ட் வர்றாங்கன்னு சொல்லி சர்ப்பரைஸ் குடுத்தீங்களே...அதான் நானும் இப்படி ஒரு சர்ப்பரைஸ் குடுத்தேன்னு சொன்னா பாருங்க!!!!அந்த அருமை மகளோட(சிவப்பு கலர் டி சர்ட்) பரிச வாங்கற போட்டோ தான் இது.
அதுக்குள்ள அவருக்கும் போன் பண்ணி சொல்ல....உடனே அவரும் ..நா இதுவரைக்கும் ஒரு மெடல் கூட வாங்கினது கிடையாது ஆனா என் பொண்ணு இந்த வயசிலேயே வாங்கிட்டாளேனு சந்தோஷத்திலே, பொண்ணுகிட்ட என்ன கிஃப்ட் வேணா கேளு அம்மா வாங்கி தருவான்னு சொல்ல..உடனே அவளும் போங்க பப்பா எப்பா பாரு டிரெஸ், டாய்ஸ்ன்னு போர் அடிக்குது..அதுனால செயினோ நெக்லஸ்சோ வாங்கி குடுங்கன்னு சொல்ல..உடனே அவருக்கு ப்யூஸ் ஆப் ஆயிருக்கும் சொல்ல வேண்டியது இல்ல தானே.இதை தானே சொந்த செலவில் சூனியம் வெச்சுக்கறதுன்னு சொல்லறது.
//உனக்கு ஏதாவது பிரைஸ் இருக்கான்னு..அதுக்கு அவ எனக்கு இன்னும் போட்டிக முடியலை//
ReplyDeleteஅதானே.... போட்டியே முடியல... அதுக்குள்ள ப்ரைஸா??
//என்னோட பொண்ணு தான் பூங்கொத்தை சீப் கெஸ்டுக்கு குடுக்கறதுக்காக மேடைக்கு வந்திருக்கா..இதை புரிஞ்சு போட்டோ எடுக்கறதுகுள்ள கீழே எறங்கிட்டா.//
ஆஹா.... வட போச்சே....
//ஒரு நிமிஷம் நம்ப முடியலை..ஏன்னா ரெண்டாவது பரிசு சில்வர் மெடல் என்னோட பொண்ணுக்கு. //
சூப்பர்.... வாழ்த்துக்கள்.... நம்ம குழந்தை பங்கேற்று பரிசும் வாங்கினா, அதை பார்ப்பதே ஒரு தனி சுகம்...
//காலைல கேட்டபோது கூட ஒண்ணும் சொல்லாம இருந்தா..இப்ப இப்படி ஒரு சர்ப்ரைஸ் தந்துட்டாளேனு..அதை பத்தி கேக்கலாம்னு பாத்தா மெடலையும் சர்ட்டிபிகேட்டையும் வாங்கிட்டு அவ க்ளாஸ் டீச்சர்கிட்ட ஓடிட்டா//
ம்ம்ம்... இந்த காலத்து பசங்க அப்படிதான்... நீங்க சர்ப்ரைஸ் குடுக்க நெனச்சா, அவங்க நமக்கு குடுப்பாங்க...
//ஏண்டா காலைல என்கிட்ட சொல்லலைனு கேக்க ..என்னை ஒரு பார்வை பாத்துட்டு சொன்னா..நீங்க மட்டும் என்னோட பர்த்டேக்கு பப்பா வர்றதை...யாரோ கெஸ்ட் வர்றாங்கன்னு சொல்லி சர்ப்பரைஸ் குடுத்தீங்களே...அதான் நானும் இப்படி ஒரு சர்ப்பரைஸ் //
ஹா...ஹா...ஹா... இந்த காலத்து பசங்கள பேசி ஜெயிக்க முடியாது...படு சுட்டி... எனிவே பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
//போங்க பப்பா எப்பா பாரு டிரெஸ், டாய்ஸ்ன்னு போர் அடிக்குது..அதுனால செயினோ நெக்லஸ்சோ வாங்கி குடுங்கன்னு சொல்ல..//
ஹா...ஹா...ஹா... அதானே.... இந்த காலத்து பசங்க ரொம்ப உஷார்...
பரிசு பெற்ற குழந்தைக்கு வாழ்த்துகள்... அதை அழகாக பதிவு செய்தமைக்கு நன்றி.......
வணக்கம் கோபி அவர்களே!
ReplyDeleteஉங்களுக்கு படைப்பாற்றல் மட்டுமல்ல படிப்பாற்றலும் ரொம்பவே இருக்கு.
நீங்க ஒவ்வொரு முறையும் பின்னூட்டம் அனுப்பும்போது ..நிஜமாவே பெருமையா தான் இருக்கு.மிக்க நன்றி.