Wednesday, January 7, 2009

விசித்தர தாத்தா - பாகம் 5

வி்ட்ட குறை தொட்ட குறையா தாத்தாவோட வைத்தியம் எங்க வீட்டில யாருக்காவது நடந்துட்டுதான் இருந்தது.மறுபடியும் பெரியண்ணாவுக்கு ஒரு பிரச்சனை,முகவாதம் வந்து இடது பக்கமா வாயும் இழுத்து கூடவே கண்ணும் மூட முடியாம ரொம்ப அவஸ்தைபட்டார். கோயம்பத்தூரில் ஒரு டாக்டர்கிட்ட மூணு மாசம் வைத்தியம் பார்த்தும் சரியாகலை.மறுபடியும் தாத்தாகிட்டே அடைக்கலம்.


வைத்தியத்தோட தாத்தாவுக்கு சாப்பாடும் எங்க வீட்டிலைனு ஆயிடுச்சு.அதுகூட பொதுகுழாயில் வர்ற தண்ணியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிடிச்சு அவர் வீட்டு தொட்டியில் நிறைச்சுவக்கணும்,அப்பப்ப துணி துவைச்சுகொடுக்கணும். அதுல குறைகண்டுபிடிக்கறதே அவர் வேலை அதுக்குதகுந்த மாதிரி அவரை கடுப்பேத்தரதே என் வேலையாகவும் இருந்துச்சு.


அண்ணாவோட முகம் சரியாய்டுச்சு,ஆனா அதற்கு பிறகும் தாத்தா நேரா நேரத்துக்கு சாப்பிட வரமாட்டார்,வந்தாலும் எல்லா சூடா இருக்கணும் இல்லைனா அம்மாவுக்கு திட்டு.அப்பா வியாபாரியா இருந்ததால விடிகாலையில் போய்ட்டு மத்தியானம் தான் வருவார் வந்தவுடன் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கணும் அந்த நேரம் பார்த்து தான் தாத்தா ரேடியோவை சத்தமா வைப்பார்.இதுனால தினமும் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை நடக்கும் ஆனா பேசாம மட்டும் இருக்கலை.

இப்படி இருக்கும் போது என்னோட சின்ன அண்ணா ஊரில் இருந்து வந்திருந்தான்.அவனும் நானும் சேர்ந்து ஒரு நாள் தாத்தா வீட்டுக்குள் போனோம்,ஆனா அவர் எங்களை தொரத்திரதிலேயே குறியா இருந்தார் சரி இன்னொரு தடவை பார்த்துக்கலாம்னு வந்திட்டோம்.
அதுக்கு தகுந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சுது அது என்னன்னா அவரு மருந்து அரைக்கறதுக்கு வித விதமா கல்லு வெச்சிருந்தார அதில ஒண்ணை காணலை அதை தேடித்தரதுக்கு நானும் சின்னன்னாவும் போனோம்.


நாங்க கல்லை தேடறதும் அவர் எங்க பின்னாடியே இருந்தார்(அவ்வளவு நம்பிக்கை).கல்லு கிடைச்சவுடன் கெட்அவுட்.அப்படி இருக்கும் ஒரு நாள் அவரோட ரின் சோப்பும்,கரண்டியும் காணாம போச்சு. போலீஸை கூப்பிடுறேனு ஒரே கூச்சல். வீதி ஜனங்க மறுபடியும் ஆஜர்.இது நடந்த கொஞ்ச நாளில்(ஓடிப்போன மகனோட மகன்) பேரன் மறுபடியும் வந்தார்,கோயம்பத்தூரில் பி.எஸ்.ஜி (மெரிட்டில்)காலேஜில் சேர்ந்துட்டதாகவும் தாத்தாவை பார்க்க வந்ததாகவும் சொன்னார்.ஆனா தாத்தா மட்டும் வீட்டுக்குள்ளே விடலை.வேற வழி? எங்க வீடு தான் இருக்கே.அதுக்குபிறகு நிறைய தடவை அவரோட பேரன் வந்திருந்தார் அப்பவெல்லாம் புட் அண்டு அகாமடேஷன் எங்க வீட்டில் தான்.

(வாரேன்)....

2 comments:

  1. தாத்தா ரொம்ப தான் நச்சு போல இருக்கே? எப்பிடிதான் சமாளிச்சீங்களோ. இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது உங்க குடும்பத்தோட பொறுமைதான். அட்ஜஸ்ட்மென்ட் தான் வாழ்க்கை. அதும் அப்பிடியெல்லாம் செய்றோம்ணு தெரியாமலே இயல்பாவே இருக்கோம் பாருங்க அதுதான் ஸ்பெஷல்..ம்ம்ம்.....

    ReplyDelete
  2. போன தலைமுறை பொதுநலவாதியாதான் இருந்தாங்க போல...நாம தான் ரொம்ப சுயநலவாதியாயிட்டோம்னு தோணுது.

    ReplyDelete