Saturday, December 20, 2008

அல்லி என் தோழி

இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என்னுடன் படித்தவள்.எனக்கு அவளை(அல்லி) பிடிக்க காரணமே அவளோட பேரும் அவ அக்காகளோட(மல்லி, செண்பகம் மற்றும் தாமரை) பேரும் அவங்க வீட்டு நெய் தோசையும் தான்.ஸ்கூல் அவ வீட்டு பக்கத்திலே இருந்ததால தினமும் இண்டர்வெல் பீரீடியலில் ரெண்டு பேரும் நெய் தோசை சாப்பிட ஓடிடுவோம். அவளோட வீட்டிலேயே,மேல்மாடி அவங்க குடியிருக்கவும்,கீழே பெரிய ஹாலில் அப்பாவும்,பெரியப்பாவும் நெய்,வெண்ணெய் வியாபாரம் செய்துட்டு இருந்தாங்க அதனால எப்பவும் அவங்க வீட்டில் நெய் வாசமா இருக்கும். எங்க ஸ்கூல்(1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை) சந்தைக்குள்ளே இருந்தது, திங்க கிழமை சந்தை கூடுறதால அன்னைக்கு ஸ்கூல் லீவு. அப்பவெல்லாம் நான் அவங்க வீட்டுக்கு ஓடிடுவேன் ஏன்னா பக்கத்து கிராமத்தில் இருந்து ரொம்ப பேர் வெண்ணெய் விக்கறதுக்காக அவங்க வீட்டுக்கு வருவாங்க.அந்த ஏரியாவே ஜெ ஜெனு இருக்கும்.அப்புறம் விதி செய்த சதி 6ம் வகுப்பு முதல் ஸ்கூல் ரொம்ப தூரத்தில் இருந்தது,அதோட நெய் தோசை போய்டுச்சு ஆனா எங்க நட்பு மட்டும் போகலை.ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரதுக்குள்ளே அவ அக்காக்களுக்கும் கல்யாணம் ஆச்சு.நாங்களும் பத்தாவது முடிஞ்சு லீவில் இருந்தோம்.அப்ப ஒரு நாள் கோவிலில் அவளை பார்த்தேன்,என்னால நம்பவே முடியலை.....அவளுக்கு(எங்களுக்கு கூட சொல்லாமலேயே)கல்யாணம் ஆயிடுச்சாம்.அதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சு எதேச்சையா பார்த்தபொழுது அவளுக்கு இரண்டு குழந்தைகள்.கிட்டதட்ட 15 வருஷம் ஆயிடுச்சு அவளை பார்த்து....இங்கு வந்த பிறகும் அவளை இப்பவும் நினைக்க வைக்கற அவங்க வீட்டு பிராண்ட் நெய்!!!!!

3 comments:

  1. எனக்கு நெய் வாசம் ரொம்பப் பிடிக்கும். இப்பெல்லாம் நெய் அதிகம் கூடாது என்ற பயம் இருந்தாலும், போகும்போதும் வரும்போதும் வாசனை பிடிக்கணுமுன்னே ஒரு பாத்திரத்தில் நெய் காய்ச்சி வச்சுக்குவேன்:-))))

    ReplyDelete
  2. எனக்கு நெய் வாசம் ரொம்பப் பிடிக்கும். இப்பெல்லாம் நெய் அதிகம் கூடாது என்ற பயம் இருந்தாலும், போகும்போதும் வரும்போதும் வாசனை பிடிக்கணுமுன்னே ஒரு பாத்திரத்தில் நெய் காய்ச்சி வச்சுக்குவேன்:-))))

    ReplyDelete
  3. வணக்கம் டீச்சர்! கொலஸ்ட்ரால் பயம் தானே...இங்கயும் அப்படி தான் இருக்கு டீச்சர்.மகளுக்கும் விளக்குக்கு மட்டும் தான் நெய்!!!

    ReplyDelete