Friday, December 26, 2008

விசித்தர தாத்தா - பாகம் 1

இந்த தாத்தாவுடைய பெயர் மாதவன்,பாட்டி பேர் தெரியலை.ஊர் திருவனந்தபுரம்.அந்த காலத்து டி.பார்ம் அதோடேயே ஆயுர்வேதத்திலும் நல்ல அனுபவம் இருந்தது.ரொம்ப காலமா ஸ்ரீலங்காவில் குடும்பத்தோடு இருந்தார்.அப்புறம் இந்த ஊருக்கு(கோவை மாவட்டத்தில்) எப்படி வந்தார்னும்,எதுக்கு இங்க குடி வந்தார்னும் தெரியலை!!! அவங்களுக்கு ரெண்டு ஆம்பிளை பசங்க மட்டும் தான்,அவங்களும் படிச்சு நல்ல வேலையில் மாயவரத்தில் இருந்தாங்க.அதில் மூத்த மகனுக்கு இரண்டு பொண்ணும் ஒரு ஆணும்,இரண்டாவது மகனுக்கு இரண்டும் ஆம்பிளை பசங்க.

இந்த தாத்தாவும் பாட்டியும் மட்டுமா தனியா நாங்க இருந்த ஏரியாவில் குடி இருந்தாங்க.எப்பவாவது வீட்டுக்கு வந்து போய் இருந்தாங்க.அப்புறம் கொஞ்ச நாளில் வேற வேற ஏரியாவுக்கு குடி மாறி போய்ட்டோம்.கொஞ்ச நாள் அந்த தாத்தா கூட தொடர்பு இல்லாம இருந்தது. ஒரு நாள் அந்த தாத்தா அவரோட மூத்த மகனை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்தார்,அவரோட மகன் வேலையை விட்டுட்டார்னும்,கிடைச்ச செட்டில்மெண்ட் பணத்தில் தொழில் செய்யறாதகவும் சொன்னார்.

அது வேஸ்ட் காட்டன் மில்ன்னும் தொடங்கினா நல்ல லாபம் இருக்கும்னு எங்கப்பா கிட்ட சொல்லி,அவரையும் பணம் போட சொல்லி கேட்டுகிட்டிருந்தாங்க...அப்பாகிட்ட சொத்து எதுவும் இல்லைனாலும் பண புழக்கம் இருந்த காலம்.அவரும் அடடா நமக்கும் நாலு குழந்தைக இருக்கே மில் நல்லா ஓடுச்சுன்னா அதுங்களும் நல்லா இருக்குமேனு நினைச்சார்!!!!

பொள்ளாச்சியில் இடத்தையும் பார்த்து பூஜையும் போட்டாச்சு.

(வாரேன்)...

3 comments:

  1. இதென்ன அநியாயம்?

    இவ்வளோ நீளமான பதிவெல்லாம் போட்டா எப்படிங்க?

    அதிலும் என்னை 'குரு'வாச் சொல்லிக்கிட்டு......

    இது மலையாளம் குரு இல்லை:-)

    ReplyDelete
  2. ஏம்ப்பா..... உங்க பின்னூட்டப்பெட்டி,
    கடுதாசி வந்துச்சு, இல்லை வரலைன்னு சொல்லவே சொல்லாதா?

    பொட்டிக்குள்ளே விழுந்துச்சா இல்லையான்னு தெரியாம முழிக்கவேண்டி இருக்கே.

    ReplyDelete
  3. அதிகமா ஒண்ணும் இல்லை டீச்சர்.....மிஞ்சி போனா நாலாம் பாகம் வரைக்கும் தான் போகும்.

    பொட்டிக்குள்ளே விழந்தச்சுனு எப்படி தெரியப்படுத்தனும்னு சொல்லுங்க டீச்சர்.

    ReplyDelete