Wednesday, December 24, 2008

அழகுக்குறிப்புகள் சில

வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திகொள்ள....

முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடத்தில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

தினமும் ஒரு ஸ்பூன் கடலை மாவுடன் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகம் கழுவினால் நல்ல புதுப்பொலிவுடன் இருக்கும்.

காய்ச்சாத பாலில் கடலை கலந்து அரை மணி வீதம் காலை மாலை தடவி வர பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும்.

தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது பொடி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வாரமொரு முறை கை கால்களில் தேய்த்து குளித்தால் தோல் வழவழப்பாகும்.


முல்தானி மிட்டியுடன் விட்டமின் ஆயிலும் சேர்த்து முகத்தில் பூசினால் முகம் பளிச்சென்று ஆகும்.

வீட்டிலேயே ஹேர்ஆயில் மசாஜ் செய்ய, சமஅளவு தேங்காய் எண்ணெய்யுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து மிதமாக சூடாக்கி ஒரே சீராக தலை முழுவதும் பதினைந்து நிமிடம் மசாஜ் செய்யவும்,பிறகு நல்ல சூடான நீரில் டவலை நனைத்து,பிழிந்து சில நிமிடங்கள் தலையில் சுற்றி வைக்கவும். பிறகு ஷாம்பூ போட்டு தலை கழுவவும்.


இப்போதைக்கு இது டிரை பண்ணிப்பாருங்க.

9 comments:

  1. //காய்ச்சாத பாலில் கடலை கலந்து //

    நம்ம வண்டி சின்னதா இருக்கு. கடலைக் கொண்டுவர முடியாதுன்னு காய்ச்சாத பாலை எடுத்துக்கிட்டுக் கடலுக்குப்போய் கலந்துட்டு வந்தேன்:-))))))

    ReplyDelete
  2. //காய்ச்சாத பாலில் கடலை கலந்து //

    நம்ம வண்டி சின்னதா இருக்கு. கடலைக் கொண்டுவர முடியாதுன்னு காய்ச்சாத பாலை எடுத்துக்கிட்டுக் கடலுக்குப்போய் கலந்துட்டு வந்தேன்:-))))))

    ReplyDelete
  3. கடலை மாவு டீச்சர்...வார்த்தை விட்டுபோயிடுச்சு.ஆனா உங்க கமண்ட் படிச்சு என்னால சிரிப்பை நிறுத்தமுடியலை!!!!!!

    ReplyDelete
  4. இத்தனையும் சொன்ன பிறகு ஒரு டிப்ஸ் சொல்லி முடிக்கணும் அதுதான் “எப்பவும் ஸ்மைலிங் ஃபேஸ் இருக்கணும்”
    அது இல்லையென்றால் முகம் எத்தனி பளிச்சென்று இருந்தாலும் எடுபடாது ....சரிதானே சிந்து

    ReplyDelete
  5. இத்தனையும் சொல்லி முடிச்சதும் ,இன்னும் ஒரு டிப்ஸ் சேர்க்கணும் .அதுதான்
    எப்பவும் ஸ்மைலிங்கா முகம் இருக்கணும்”
    அது இல்லேன்னா,முகம் எத்தனி பளிச்சுன்னு இருந்தாலும் எடுபடாது......என்ன நான் சொல்றது?

    ReplyDelete
  6. மிகச் சரியா சொல்லி இருக்கீங்க. வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. எப்போதும் இளமையான எண்ணங்களுடன் இருங்கள். உடலிலும் இளமை ஊறுவதை உணரலாம்.

    ReplyDelete
  8. நேர்ல பாக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க. நீங்க போட்டிகள் எதிலயும் கலந்துகிட்ட்டிங்களா? ஒங்க பிளாக்கை எதேச்சையாய்ப் படிக்க ஆரமிச்சேன். இப்ப ரெகுலராப் படிக்கிறேன். நெம்ப சுவாரசியமாய், யதார்த்தமாய், லேசா நகைச்சுவை இழையோட எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நன்றி லதானந்த் அவர்களே! அழகி போட்டியா?

    ReplyDelete