பூஜை பண்ணி தொடங்கின மில்,தாத்தாவோட மகன் பொறுப்பில் நல்லா தான் போய்கிட்டிருந்ததா வீட்டில் பேசிக்கிட்டிருந்தாங்க(அப்ப எனக்கு எட்டு வயது).அப்பா வெறும் ஸ்லீப்பிங் பார்ட்னரா தான் இருந்தார்.ஒரு நாள் நாங்க மில்லை பார்த்துட்டு வந்தோம்.அப்பா,அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.
ஆனா எப்பவும் சந்தோஷம் மட்டும் வாழ்க்கை இல்லையே....கொஞ்ச நாளில் தாத்தாவோட மகன் எப்பவும் குடிச்சுட்டு மில்லுக்கே வரதில்லைனும்,பணத்தை வீணா செலவழிக்கறதாகவும் வீட்டில் பேசிக்கிட்டுருந்தாங்க..இப்படியே கொஞ்ச நாள் போச்சு ஒரு நாள் காலையில் தாத்தா பதட்டமா வீட்டுக்கு ஓடி வந்தார்,அவரோட மகன் மில்லில் இருந்த மெஷினுகளை வித்துட்டு வசூல் பண்ணின பணத்தோட எங்கயோ ஓடிட்டார்னும்,மனைவியும் குழந்தைகளும் அவர் வீட்டுக்கு வந்து அழதுட்டு இருக்காங்கனும் சொன்னார்.
அப்பாவும் தெரிஞ்ச ஆளுங்களை வச்சு தெரிஞ்ச பக்கம் எல்லாம் தேடிபார்த்தார் ஆனா ஒரு பிரயோஜனம் இருக்கலை....இதில் எனக்கு புரியாத விஷயம் இவ்வளவு நடந்த பிறகும் எங்க வீட்டில் யாரும் அந்த தாத்தா கூட சண்டையே புடிக்கலை!!!!! பிறகும் வந்து போய் தான் இருந்தாங்க,அடுத்த ரெண்டு மாசத்திலேயே மருமகளோட அப்பா வந்து மகளையும்,குழந்தைகளையும் அழைச்சுட்டு ஊருக்கு போய்ட்டார்.
அவரோட மகன் திரும்ப வரவும் இல்லை,அவங்க பசங்க மட்டும் அப்பப்ப தாத்தா வீட்டுக்கு வந்து செலவுக்கு பணம் வாங்கிட்டு போவாங்க.இதையெல்லாம் தெரிஞ்சுகிட்ட அவரோட ரெண்டாவது மகன் தாத்தா வீ்ட்டுக்கு வரதை நிறுத்திட்டார்.குடும்ப சுமை ஏறிடுமுன்னு பயம்!!!!.
தாத்தாவோட பேரில் ஒரு மெடிக்கல் ஷாப்பின் லைசென்ஸ் இருந்ததால மாசா மாசம் கொஞ்ச பணமும்,அது கூட ஆயுர்வேத வைத்தியம் பாத்து ஓரளவு கிடைச்ச பணத்தில் தான் தாத்தா பாட்டியோட வாழ்க்கை ஓடிட்டிருந்தது.தாத்தாவுக்கு இருந்த தைரியம் பாட்டிக்கு இருக்கலை...எப்பவும் ஓடிப்போன மகன் ஞாபகம் தான், இப்படியே கவலைபட்டு படுத்த படுக்கையாய்ட்டாங்க.
(வாரேன்)....
No comments:
Post a Comment